IPL... சன்ரைசஸ் ஹைதரபாத் அணி குசல் ஜனித் பெரேராவுக்கு வலை வீசியது.

-Hassim Mohamed Naleem-
11ஆவது ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், அண்மைக்காலமாக நடைபெற்றுவருகின்ற சர்வதேச T-20 போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அதிரடியை வெளிப்படுத்தி வருகின்ற குசல் ஜனித் பெரேராரவை ஒப்பந்தம் செய்வதற்கு சன்ரைசஸ் ஹைதரபாத் அணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்முறை ஐ.பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னரை 12 கோடிகள் கொடுத்து தக்கவைத்திருந்தது. எனினும், தென்னாபிரிக்க அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித், வோர்னர் ஆகிய இருவருக்கும் ஒரு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு முதல் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த வோர்னர் நேற்று (28) அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து வோர்னருக்குப் பதிலாக இலங்கை அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள நான்கு மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நாளை(30) ஆரம்பமாகவுள்ளது. இதில் தம்புள்ளை அணிக்கு விளையாடவுள்ள குசல், அந்த அணியின் உதவித் தலைவராகவும் செயற்படவுள்ளார்.
இதனால் குசல் ஜனித் பெரேரா, ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இலங்கை அணி எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்காக தயாராகும் நோக்கில் இந்த மாகாணங்களுக்கிடையிலான 4 நாட்கள் போட்டியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த தொடர் எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால், ஐ.பி.எல் தொடரில் குசல் ஜனித் பங்கேற்கது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், தெரிவுக் குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் அவர் சன்ரைசஸ் அணிக்காக விளையாடுவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
👍🏼👍🏼
IPL... சன்ரைசஸ் ஹைதரபாத் அணி குசல் ஜனித் பெரேராவுக்கு வலை வீசியது.
Reviewed by nafees
on
04:10
Rating:
Reviewed by nafees
on
04:10
Rating:
No comments: