Dr ஆரியதாச கமகே எம்மை விட்டும் பிரிந்தார்.


Dr.Ariyasena U. Gamage...
யார் இந்த வைத்தியர் என்ற கேள்விக்கு,

அம்பாரைக் கொத்துப் பிரச்சினை தீயாகப் பரவியபோது-
அந்த "வந்த பெஹத்" என்ற சாமான் இந்த உலகத்தில் இதுவரை எங்குமே கண்டுபிடிக்கப்படாத ஒன்றென்று , சிங்கள ஊடகங்களிலும் அதனைத்தொடர்ந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ் ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டதே ,அந்த ஆக்கத்தின் சொந்தக்காரர்.

இனங்களுக்கிடையில் எப்போதும் ஒரு நல்லுறவு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்..\


மாவனல்லையை வசிப்பிடமாகக் கொண்டவர்..கடந்த காலங்களில் மாவனல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற விரிசல்களின்போது சமூகங்களுக்கிடையில் சமரசத்தைக் காண்பதில் முழுமையாய் ஈடுபட்டவர்..

ஒரு வைத்தியர், உடல்- உள வியாதிகளுக்கப்பாலும் ,சமூகத்தில் சீர் படுத்தப்பட வேண்டிய ஏனைய தேவைப்பாடுகளிலும் தன் பங்களிப்பை எங்கனம் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணமாய் வாழ்ந்து விட்டு, இன்று தனது 65 ஆவது வயதில் இவ்வுலகைப் பிரிந்து விட்டார்.

தன் கடைசியான ஒரு வருடத்துக்கு மேற்பட்ட காலம் ஒரு வகைப் புற்று நோயினால் அவதியுற்றிருந்தாலும், மனதளவில் தைரியத்தைத் தக்கவைத்துக் கொண்டு, தான் பயணித்த பாதையில் தொடர்ந்தும் இயங்கினார்.

தலை சிறந்த பொது வைத்திய நிபுணராக,
பல்கலைக்கழக விரிவுரையாளராக,.. என்று நீண்டுசெல்லும் துறைசார் தகமைகளுக்கப்பால்,

சிறந்த எழுத்தாளராக, ஒரு நடுநிலையான சிந்தனையாளராக,
அச்சு, இலத்திரனியல் ஊடகங்களூடாக மக்களோடு இரண்டறக் கலந்து , சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்காகத் தனது இறுதி மூச்சுவரை பங்காற்றினார்.

அன்னாருடைய இழப்பு, இந்த நாட்டின் தற்போதைய சூழ் நிலையைப் பொறுத்தவரை ஒரு நிரம்பாத இடைவெளியே!

அவரது நற்செயல்கள் அவரோடு பயணிக்கட்டும்!
- Izzath Muhammed -

Dr ஆரியதாச கமகே எம்மை விட்டும் பிரிந்தார். Dr ஆரியதாச கமகே எம்மை விட்டும் பிரிந்தார். Reviewed by nafees on 04:22 Rating: 5

No comments:

Powered by Blogger.