BMW காரின் உரிமையாளரை 'உள்ளே' அனுப்பிய நீதிமன்றம்.

பத்தரமுல்ல – தலவத்துகொட பிரதேசத்தின் தியவன்னா ஓயாவில் விபத்துக்குள்ளான பி.எம்.டபிள்யு
காரின் உரிமையாளரை மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், இன்று (20) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர், நேற்றைய தினம் (19) சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
இதனையடுத்து, சந்தேகநபர் வைத்திய பரிசோதனைகளுக்காக, முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
BMW காரின் உரிமையாளரை 'உள்ளே' அனுப்பிய நீதிமன்றம்.
Reviewed by nafees
on
02:25
Rating:
Reviewed by nafees
on
02:25
Rating:
No comments: