பாடசாலையை உடைத்து மாணவர்களின் உண்டியல்களை திருடிய நபர்கள்.

மட்டக்களப்பு - அருணோதய வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு, மாணவர்களின் உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை பணம் திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் சுபாஷினி ரவிதேவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இன்று காலை வகுப்பறைக்கு சென்ற போது வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு, வகுப்பறையில் உள்ள அலுமாரி உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிடுந்த உண்டியல்கள் திருடப்பட்டுள்ளது.
குறித்த உண்டியல்கள் மாணவர்களின் சேமிப்புக்காக வங்கியினால் வழங்கப்பட்டு, மாணவர்களினால் சேமிக்கப்பட்ட பணம் இருந்தது.
பாடசாலையில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையில் சுமார் 375 மாணவர்கள் கல்வி கற்கும் வேளையில் கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த பாடசாலைக்கு பாதுகாப்பான சுற்றுமதில்கள், இல்லாமையாலும் , இரவு நேர காவலாளிகள் இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாடசாலையை உடைத்து மாணவர்களின் உண்டியல்களை திருடிய நபர்கள்.
Reviewed by nafees
on
21:28
Rating:
Reviewed by nafees
on
21:28
Rating:
No comments: