அலுத்கமை கலவரம் நஷ்டஈடு விடயத்திலும் சர்ச்சை ..



அலுத்கமை கலவரம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை
அது தொடர்பில் எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கடுமையான முயற்சியினால் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டை ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

கடந்த மாதம் குறித்த நஷ்ட ஈடு வழங்கப்பட இருந்தபோதும் அது தற்காலிகமாக பிற்போடப்பட்ட  நிலையில் அலுத்கமை கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கான , காயமடைந்தவர்களுக்கான , மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டவர்களுக்கான  நஷ்ட ஈடும் எதிர்வரும்  22ம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிது .

ஆனால் மொத்தமாக அலுத்கமை கலவரத்தில் 273 பேர் பாதிக்கப்பட்டுள்ள போதும் அதில் சுமார் 89 பேருக்கும் மாத்திரமே நஷ்ட ஈடு வழங்கப்படவுள்ளதாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் குறிப்பிட்டார்.

தாங்களும் கலவரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்ட போதும் இதுவரை தங்களுக்கு எப்போது நஷ்ட ஈடு வழங்கப்படும் என்பது தொடர்பில் மீள் குழியேற்ற புனர்வாழ்வு அமைச்சு அறிவிக்கவில்லை என அவர் எமது செய்தி பிரிவிற்கு விஷனம் வெளியிட்டார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட பலரும் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்ட அவர் எதிர்வரும் 22 ம் திகதி நஷ்ட ஈடு கிடைக்காத அனைவரும் அமைச்சை நோக்கி படையெடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.




அலுத்கமை கலவரம் நஷ்டஈடு விடயத்திலும் சர்ச்சை .. அலுத்கமை கலவரம் நஷ்டஈடு  விடயத்திலும் சர்ச்சை .. Reviewed by nafees on 05:32 Rating: 5

No comments:

Powered by Blogger.