இனந்தெரியாத நபர்களின் பிளேட் வெட்டுக்கு உள்ளான கரீம் ஹசின் வைத்தியசாலையில்...

பதுளை, ஹாலிஎல பிரதேசத்தில், பிளேட் வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர், பதுளை வைத்தியசாலையில், நேற்று (28) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளாரென, ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
மொஹொமட் கரீம் ஹசின் என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை இனந்தெரியாத நபர்கள் இருவரே, பிளேடால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனரென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபரின் வயிறு மற்றும் கால்களில் பிளேடால் வெட்டப்பட்டக் காயங்கள் காணப்படுகின்றனவென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இனந்தெரியாத நபர்களின் பிளேட் வெட்டுக்கு உள்ளான கரீம் ஹசின் வைத்தியசாலையில்...
Reviewed by nafees
on
02:24
Rating:
Reviewed by nafees
on
02:24
Rating:
No comments: