கிண்ணியா தளவைத்தியசாலையில் பிரசவ விடுதியில் இடப் பற்றாக்குறை , மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் இருந்தும் பிரச்சினைக்கு தீர்வு இல்லை!!

கிண்ணியா தளவைத்தியசாலையில் பிரசவ விடுதியில் இடப்பற்றாக்குறை காரணமாக
ஒரு கட்டிலில் இரு தாய்மார்கள் தங்கிருந்து பிரசவத்தை சந்திக்கவேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு கட்டிலில் இரு தாய்மார்கள் தங்கிருந்து பிரசவத்தை சந்திக்கவேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது அரசியல் வாதியின் கவனத்திற்கு பக்கத்தில் இருக்கும் #டி_பீ ஜாயா பாடசாலை இடத்தை வைத்தியசாலைக்காக கொடுக்கப்பட்டும் அந்த இடத்தில் கட்டிடம் எழும்பாததே இதற்கு முழு காரணம் இதனை கருத்தில் கொள்ள வேண்டியவர்கள் யார்?
வருடத்திற்கு 1400 மேள் பிள்ளைகள் பிறக்கின்றது கிண்ணியா தள வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு ஒன்று தொடக்கம் 16 வரை பெண்கள் வருகின்றனர்...... வருகின்றவர்களுக்கு உடனே பிரசவம் நடப்பதில்லை இரண்டு மூன்று நாட்கள் போகலாம் அந்த தருணத்தில் ஒரு கட்டில் 3 பேரும் இருக்க நேரிடுகிறது..
தாய்மார்களுக்கான பிரசவ அறையில் 11 கட்டில் மாத்திரமே ஒதுக்க முடியும் முடியும் காரணம் இடம் காணாமை.
பிரசவ நேரத்தில் பல்வேறு இடப் பற்றாக் குறைகளை தாய்மார்கள் எதிர் நோக்குகின்றனர்.இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வைத்தியசாலை தரமுயர்வு தொடர்பில் தேர்தல் காலங்களில் ஆவணங்கள் போட்டோ பிரதிகளுடன் மக்களுக்கு வெறுமென பூச்சாண்டி செய்யப்பட்டது மக்களும் நம்பினார்கள் கிண்ணியாவில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் கிண்ணியா கிடந்த கிடப்பிலேயே இருப்பதாகவூம் மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர்.

கிண்ணியாவில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் கிண்ணியா மண் பல வருட காலமாக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களைக் கண்டு கொண்டது ஆனால் குறிப்பிட்டு சொல்ல கூடிய அபிவிருத்திகள் இடம் பெறவில்லை கிண்ணியா தளவைத்தியசாலைக்கு வான்எல, ஆயிலியடி,சூறங்கல்,சீனக்குடா,வெ ள்ளைமணல் என ப்வேறு பிரதேசங்களிலிருந்தும் நாளாந்தம் மருத்துவ சிகிச்சைகளுக்காக வருகை தருகின்றனர்கள் .எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்றை முன் வைக்குமாறு மக்கள் உரியவர்களிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.
படங்கள் கிளிக் செய்யப்பட்ட காலம்(2018.03.27)
கிண்ணியா தளவைத்தியசாலையில் பிரசவ விடுதியில் இடப் பற்றாக்குறை , மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் இருந்தும் பிரச்சினைக்கு தீர்வு இல்லை!!
Reviewed by nafees
on
20:25
Rating:
No comments: