தப்பிச் சென்ற துபாய் இளவரசி, இந்தியக் கடற்படையால் பிடிக்கபட்ட சம்பவம்.

இந்தியாவுக்கு கடல்வழியாக வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பிடித்து
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது.
துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின் இளவரசியுமான சேகா லத்தீபா குதிரையேற்றம், மலையேற்றம், பாரா கிளைடர், செயற்கை இறக்கையைக் கட்டிக் கொண்டு வானில் பறத்தல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஆர்வமுடையவர்.
தந்தையின் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்பாத சேகா கடந்த 4ஆம் திகதி அமெரிக்க, பிரெஞ்ச் குடியுரிமையுள்ள தனது நண்பர் ஹெர்வ் ஜாபர்ட் என்பவருடன் நோஸ்ட்ரோமோ என்கிற படகில் ஏறிக் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார்.
இந்தத் தகவலை அறிந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் சேகா வந்த படகைக் கோவா அருகே மடக்கியுள்ளனர்.
பின்னர் சேகாவையும், அவர் நண்பர் ஹெர்வ் ஜாபர்ட்டையும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்
http://www.dailymail.co.uk/news/article-5559289/Ex-French-spy-helped-runaway-princess-escape-Dubai-claims-beaten-special-forces.html
தப்பிச் சென்ற துபாய் இளவரசி, இந்தியக் கடற்படையால் பிடிக்கபட்ட சம்பவம்.
Reviewed by nafees
on
04:52
Rating:
Reviewed by nafees
on
04:52
Rating:
No comments: