சுற்றாடல் பாதுகாப்பு.... கண்டியில் ஆதிவாசிகளின் தலைவரின் ஊடக சந்திப்பு.
சுற்றாடல் பாதுகாக்கப்படும் அதே வேளை சுற்றாடலில் இருந்து மனிதன் கட்டாயம் பெறவேண்டிய
வற்றை முறையாகப் பெறுவதற்கான திட்டங்களும் இருக்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவன் ஊருகே வன்னியலத்தோ தெரிவித்தார்.
கண்டியில் இடம் பெற்ற வைபவம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
பத்து இலட்சம் மரம் நடுத்திட்டம் தொடர்பாக அவர் விளக்கமளித்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-
நாம் சுற்றாடலுடன் இணைந்த வாழ்கையை வாழ்க்கிறோம்.அதிலும் ஆதிவாசிகள் மரங்களையும் தோப்புக்களையும் ஆதாரமாகக் கொண்டே வாழ்கின்றனர். பொதுவாக சுற்றடாலில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும் நேரடியாக ஆதிவாசிகள் பாதிப்படைவர். ஆதற்காக சுற்றாடலில் இருந்து பெற வேண்டிய நன்மைகளை இழக்க முடியாது. அவை ஈடு செய்யப்பட வேண்டும்.
ஒரு மரத்தை வெட்டினால் அதற்குப் பதிலாக இரண்டு மரங்களையாவது நடுதல் வேண்டும். காடுகள் அளிக்கப்பட்டால் நேரடியாகவே ஆதிவாசிகள் இருப்பு அழிந்து விடும்.
உலகில் எல்லா செயற்பாடுகளிலும் நல்ல பக்கமும் உண்டு. தீய பக்கமும் உண்டு. ஒரு சிலர் நல்லதை விட்டு விட்டு தீயதை பற்றிப் பிடிக்கின்றனர். மேலும் சுற்றாடலில் மரங்கள் எனும் போது கஞ்சா செடிபற்றி இங்கு கேட்கப்பட்டது. கஞ்சா செடியானது மருத்துவ ரிதியில் மிக பெறுமதி மிக்க மூலிகையாகும். ஆதன் நன்மைகளை பெற முயற்சிக்க வேண்டும். உலகில் மிகச் சிறந்த கஞ்சா இனம் இலங்கையில் காணப்படுகிறது. எனவே அதனைப் பயிர் செய்து ஏற்றுமதி செய்வதில் தவறில்லை.
நாட்டில் காட்டு வளம் குன்று வது எமக்கு பாரிய பிரச்சினைதான். இது n தாடாபாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றாடலுடன் ஒன்றரக் கலந்த எம்மால் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட பல தரப்பினரும்இஇணைந்தே செயற்பட வேண்டும். நாடலாவிய ரீதியில் 10 இலட்சம் மமை; நடும் திட்டம் ஒன்று கண்டி பெமிலி யோகா நிலையம் மேற்கொள்ள முன் வந்துள்ளது. அதற்கு எமது பங்களிப்பை வழங்கி வருகிறோம் என்றார்.
இங்கு கருத்து வெளியிட்ட கண்டி பெமிலி யோகா நிலைய தலைவர் குரு ஜீ ஜெயக்குமார் தெரிவித்தாவது-
மே மாதம் முதலாம் வாரம் இது ஆரம்பிககப்பட உள்ளது. ஆதிவாசிகளின் மேற்படி திட்டத்திற்கான அனுசரணையை நாம் வழங்குகிறோம். இந்தியாவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களைச் சந்தித்தேன். அவர் ஜந்து வருடத்தில் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். அதன் படி இதுவரைக்கும் 30 இலட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே எம்மைப் பொருததவரை 10 இலட்சம் என்ற இலக்கை அடைய முடியும் எனக் கருதுகிறேன்.
இதற்காக பலா, தென்னை, கும்புக், இழுப்பை, வேம்பு போன்ற பல வகைத் தாவரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்பது இடங்களில் நாற்று மேடைகள் (தவான்) அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து கண்றுகளைப் அபற்றுக் கொள்வோம். மேற்படி மமை; நடும் அமைப்பில் தலைவராக திருமதி சாமலி குனரத்னவும், செயலாளராக ஜயதிலக அவர்களும், பொருளாலராக நெவில் பத்திரனவும் உள்ளதாகத் தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பு.... கண்டியில் ஆதிவாசிகளின் தலைவரின் ஊடக சந்திப்பு.
Reviewed by nafees
on
21:30
Rating:
No comments: