ஐ.தே.க.யின் முக்கிய உயர்மட்ட கூட்டம் நாளை மறுதினம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டம் நாளை (29) மறுதினம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்ட படி கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு இக்கூட்டம் நடைபெறவிருந்த போதிலும், இக்கூட்டத்தின் போது பிரதமருக்கு எதிராக எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வது எப்படி என்பது குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி கட்சியின் பொதுசெயலாளர் பதவியில் இருந்து கபீர் ஹஷீம் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் புதிய செயலாளராக ரனில் விக்ரமசிங்கவுக்கு மிக நெருக்கமான கல்வி அமைச்சர் அகில விராஜுக்கு வழங்கபடுவற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரம் சஜித் பிரேமதாசவுக்கு சிரேஷ்ட உபதலைவர் பதவி ஒன்று வழங்கப்படும் என தெரியவரும் அதேவேளை சாகல உள்ளிட்ட ரனிலின் முக்கிய சகாக்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என தெரிய வருகிறது.
ஐ.தே.க.யின் முக்கிய உயர்மட்ட கூட்டம் நாளை மறுதினம்
Reviewed by nafees
on
22:12
Rating:
No comments: