நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் விமர்­சிப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு எவ்வித அரு­க­தை­யுமில்லை.


(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் விமர்­சிப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு அரு­க­தை­யில்லை.
அவ­ரு­டைய ஆட்­சி­யிலே வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வ­கையில் நீதித்­துறை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர­ழிந்­துள்­ள­தா­கவும் மக்­க­ளுக்கு சட்­டத்­து­றையில் நம்­பிக்கை இல்­லாமல் போயுள்­ள­தா­கவும் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­விக்­கின்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு தொடர்பாக கதைப்­ப­தற்கோ அது­ தொ­டர்பில் விமர்­சிப்­ப­தற்கோ அவ­ருக்கு அரு­க­தை­யில்லை. தற்­போது சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வாக நிலை­நாட்­டப்­ப­டு­வ­தால்தான் அவரால் சுதந்­தி­ர­மாக கதைக்­க­மு­டி­யு­மாக இருக்­கின்­றது.

அத்­துடன் மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­திலே வர­லாற்றில் எப்­போதும் இல்­லா­த­வ­கையில் சட்டம், ஒழுங்கு சீர­ழிந்து இருந்­த­துடன் நீதித்­துறை முற்­றாக சர்­வா­தி­கார போக்­கிலே செயற்­பட்டு வந்­தது. குறிப்­பாக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சிராணி பண்­டாரநாயக்க பத­வி­நீக்­கப்­பட்­டமை, அர­சாங்­கத்தை விமர்­சித்து எழு­தி­ய­மைக்­காக ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்­டமை, ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்­டமை மற்றும் ஊடக நிறு வ­னங்கள் தாக்­கப்­பட்டமை போன்ற சம்­ப­வங்கள் கடந்த ஆட்சி காலத்­திலே இடம்­பெற் ­றன. அத்­துடன் தற்­போதும் மஹிந்த ராஜ­பக் ஷவின் சகாக்­களே சட்­ட­விரோத நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்­தைப் ­போன்று அல்­லாமல் நீதி­மன்­றங்கள் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தால்தான் கடந்த ஆட்­சியில் ஊழல் மோச­டி­க­ளுடன் தொடர்புபட்­ட­வர்கள் நீதி­மன்­றத்­தினால் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர்.

மேலும் அர­சாங்­கத்தின் உறு­தி­யற்ற நட­வ­டிக்­கை­களே மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் தலை­தூக்க கார­ண­மாகும். அர­சாங்­கத்தை பகி­ரங்­க­மாக விமர்­சிப்­ப­துடன் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் சவால்­க­ளையும் முன்­வை­த்து வரு­கின்றார். குறிப்­பாக அளுத்­க­மவில் இடம்­பெற்ற வன்­முறை தொடர்பில் முடி­யு­மானால் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்றை அமைத்து விசா­ரணை நடத்­து­மாறு தெரி­விக்­கின்றார். ஆனால் அர­சாங்கம் இது­

வரை அது­ தொ­டர்பில் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அதனால் அர­சாங்­கத்தில் இருக்கும் பிர­தான இரண்டு கட்­சி­களும் எஞ்­சி­யி­ருக்கும் காலத்­தி­லா­வது முறை­யாக செயற்­பட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். ராஜபக் ஷவினர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் ஜனாதிபதிக்கே ஆபத்து ஏற்படும். நாடும் சீரழிந்துவிடும். அத்துடன் கடந்த 3வருடங்களில் இவர்கள் முறையாக செயற்பட்டிருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட் சியே உருவாகி இருக்காது என்றார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் விமர்­சிப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு எவ்வித அரு­க­தை­யுமில்லை. நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் விமர்­சிப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு எவ்வித அரு­க­தை­யுமில்லை. Reviewed by nafees on 00:02 Rating: 5

No comments:

Powered by Blogger.