அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது..



அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருப்பதாக 
 சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்..

இதன் அனுகூலங்கள் மக்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளன. எனினும், இதுவரை பூர்த்தி செய்யப்படாத சில விடயங்களின் அடிப்படையில் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது.. அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது.. Reviewed by nafees on 05:49 Rating: 5

No comments:

Powered by Blogger.