சுதந்திர கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி கலந்துரையாடல்.


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஒன்றிணைந்த ​எதிரணி குழுவினர் ஆகியோர், பொரளையில் உள்ள பிரபல
வர்த்தகர் ஒருவரின் வீட்டில், கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஒன்றிணைந்த எதிரணி சார்பில் பசில் ராஜபக்ஷ, மஹிதானந்த அழுத்கமகே, வாசுதேவ நாணயகார, டலஸ் அலஹபெரும மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த் மற்றும் டிலான் பெரேரா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கே, இக்கலந்துரையாடல் தொடர்பானக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திர கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி கலந்துரையாடல். சுதந்திர கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி கலந்துரையாடல். Reviewed by nafees on 23:11 Rating: 5

No comments:

Powered by Blogger.