நுககஹகெதர மஸ்ஜிதுன் நூரில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விஷேட நிகழ்வு.

(தாவுஸ் எம்.அஸாம்)
சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையிலான
விஷேட நிகழ்வொன்று நுககஹகெதர மஸ்ஜிதுன் நூர் ஜும் ஆப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பள்ளிவாசல் பேஷ் இமாம் அல் ஹாபில் ஹமீத் ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக குருந்தலாவை, நெத்திபொல கெதர விகாரை விகாராதிபதி கடஹபொல பஞ்ஞகித்த தேரர் கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதியாக நாரம்மல பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி நாமல் பெரேரா கலந்து கொண்டார். மேலும் பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் தலைவர் ஏ.எம்.அஸ்மில் நிர்வாகக்குழு உறுப்பினர்களான ஐ.எல்.எம்.ஸுபியான், ஏ.எம்.எம்.ரிம்ஸான், யு.எல்.எம்.இஸ்ஸதீன் ஆகியோரும் ஆலோசனை சபை உறுப்பினர்களான எம்.கே.எம்.ஹம்தூன், ஏ.எல்.எம்.ஹாஷிம், எம்.எஸ்.எஸ்.இப்ராஹிம், எம்.எஸ்.எம்.ரியால், யு.எல்.எஸ்.ஏ.காதர்; உட்;பட மேலும் பல அதிதிகள், பிரமுகர்கள்; என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஜும்ஆ பயான் நிகழ்வையும் தொழுகையின் பின்னரான விஷேட உரையையும் அகில இலங்கை இஸ்லாமிய மார்க்கப் போதகரும், கேகாலை மாவட்ட மனித உரிமைகள் அமைப்பின் ஆலோசகருமான அஷ்ஷெய்க் கலீலுர் ரஹ்மான் தப்லீக் நிகழ்த்தியதோடு, முஸ்லிம் - சிங்கள இனங்களுக்கிடையிலான சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் எனும் தலைப்பில் கடஹபொல பஞ்ஞகித்த தேரரும் உரையாற்றினார்
நுககஹகெதர மஸ்ஜிதுன் நூரில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விஷேட நிகழ்வு.
Reviewed by nafees
on
23:41
Rating:
Reviewed by nafees
on
23:41
Rating:
No comments: