கண்டி கலவரத்தின் பின்னணியில் மகிந்த தரப்பே உள்ளனர். நாம் பொலிஸ் இடம் முறைப்பாடு செய்துள்ளோம்.


 மதக் கலவரங்களை தூண்டி விட்டு அதன் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் நபர்களை
உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். எம்மீது பழி சுமத்தி மஹிந்த தரப்பே இனவாதத்தை தூண்டுகின்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களை பாதுகாத்து நாட்டின் அமைதியாக பேண நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செய் தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கண்டி சம்பவத்தின் பின்னணியில் நாமே உள்ளோம் என மஹிந்த ராஜபக்ஷ அணி யினர் குற்றம் சுமத்தினர். இது குறித்து நாம் பொலிஸ் தரப்பிடம் முறைப்பாடு செய்து உண்மைகளை கண்டறிய தெரிவித்துள்ளோம்.

இது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித் துள்ளனர். இந்த சம்பவங்களின் பின்ன ணியில் உள்ள அரசியல் வாதிகள் யார் என் பதையும் கண்டறிய வேண்டும்.


எமது கட்சியின் எந்தவொரு உறுப்பி னரும் இந்த சம்பவத்தின் பின்னணியில் இல்லை . மாறாக எம்மை குற்றம் சுமத்தி மஹிந்த ராஜபக்ஷ தரப்பே இதனை செய் துள்ளது.

கடந்த ஆட்சியிலும் இவர்கள் முன்னெடுத்த சம்பவங்கள் என்னவென் பது எமக்கு நன்றாக தெரியும். ஆகவே பொலிஸார் இந்த உண்மைகளை வெளிப் படுத்த உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாராளுமன்றத்திலும் இந்த தகவல்களை முன்வைக்க வேண்டும்.
இல்லையேல் நாம் உண்மைகளை வெளிப் படுத்த வேண்டிய நிலைமை உருவாகும். ஆகவே பொலிஸார் உடனடியாக இவற் றினை தெரிவிக்க வேண்டும். அதுவே முறையான நகர்வாகும். இந்த நாட்டில் மதவாத செயற்பாடுகள் குறித்து உண்மைகளை வெளிப்படுத்தி யுள்ளோம், ஆனால் ஒருபோதும் ஆயு தத்தை ஏந்தி நாட்டில் குழப்பத்தை ஏற்ப டுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வில்லை. சில முஸ்லிம் அமைப்புகளும் எம்மீது குற்றம் சுமத்தின. நாம் முஸ்லிம் களை விமர்சிக்கவில்லை . ஒரு சிலர் முஸ் லிம் செயற்பாடுகள் தவறானவை என்ப தையே எனது புத்தகங்களில் சுட்டிக்காட்டி யுள்ளேன்.


அல்கொய்தா, ஜிஹாத் ஆகிய செயற்பா டுகளை சிலர் நியாயப்படுத்தினால் அவர்களும் அல்கொய்தா நபர்களாக இருக்க வேண்டும். இலங்கையில் முஸ்லிம் மக் களை பாதுகாக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் முஸ்லிம் மக் களை தூண்டி விட்டு நாட்டில் மாற்று செயற் பாடுகளை கையாள முயற்சிப்பது தடுக்கப் பட வேண்டும். இலங்கையில் ஆரம்பம் முதல் கொண்டு முஸ்லிம் மக்கள் அரசியல் பயணத்தில் இணைந்து செயற்பட்டு வரு கின்றனர். சிறந்த முஸ்லிம் தலைவர்கள் மக்களை சரியாக வழிகாட்டி வந்துள்ள னர். அதனை நாம் வரவேற்க வேண்டும்.


எனினும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எம்மை தவறாக விமர்சிக்கும் நடவடிக்கைகளை நாம் கருத்தில் கொள் ளப் போவதில்லை . நாம் எமது நடவடிக் கைகளை சரியாக முன்னெடுத்து செல் வோம். உண்மைகளை கண்டறிய நடவடிக் கைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி கலவரத்தின் பின்னணியில் மகிந்த தரப்பே உள்ளனர். நாம் பொலிஸ் இடம் முறைப்பாடு செய்துள்ளோம். கண்டி கலவரத்தின் பின்னணியில் மகிந்த தரப்பே உள்ளனர். நாம் பொலிஸ்  இடம்  முறைப்பாடு செய்துள்ளோம். Reviewed by nafees on 02:51 Rating: 5

No comments:

Powered by Blogger.