சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற பெயரில் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டும்

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டும்
என அமைச்சர்கள் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று (15) மல்வத்து மஹநாயக தேரரை சந்திக்க சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆரம்பகாலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டில் உள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப்போவதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற பெயரில் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டும்
Reviewed by nafees
on
06:50
Rating:
Reviewed by nafees
on
06:50
Rating:
No comments: