நோயினால் அவதியுறும் வறிய குடும்பத் தலைவனைக் காப்போம்.


நேற்று 25/03/2018 புத்தளத்தில் ஓர் சக்கர நாற்காலியில் இளம் தந்தையொருவைக் காணக்கிடைத்தது.
அவரின் நிலையைக் கண்டதும் உள்ளம் கவலையில் சோர்வடைந்து கண்கள் கண்ணீரை வெளிப்படுத்த ஆரம்பித்தன, இருந்தும் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொ ண்டு அந்த தந்தையிடம் நடந்த நிகழ்வுகளை விசாரிக்க ஆரம்பித்தேன். அனைத்தையும் கேட்டுவிட்டு, உரிய சிகிச்சைக்காக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் மக்களிடம் இவரது நிலமையைத் தெரியப்படுத்தி உதவிகளைப் பெற்றுக் கொடுக்கலாம் என்றெண்ணி பின்வரும் உண்மைத் தகவல்களை மக்களாகிய உங்களுடன் பகிர்கிறேன்.

மேற்குறிப்பிட்ட சக்கர நாற்காலியில் சென்ற இளம் தந்தை , அல்மினா பாடசாலை வீதி, நிந்தவூர் 09 எனும் முகவரியில் வசிக்கும் முஸம்மில் என்று அழைக்கப்படும் 32 வயது நிரம்பிய ஜுனைதீன் ஹபீல் ஆவார். இவர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மேசனாக வேலைசெய்து வீடொன்றைக் கட்டிக் கொண்டிருக்கும் பொழுது சுவர் உடைந்து விழுந்ததன் விளைவையடுத்து, தானும் மேலிருந்து விழுந்ததால் முதுகந்தண்டும், இடுப்பும் முறிந்து இடுப்புக்குக் கீழ் எவ்வித பகுதியும் இயங்காமல் இன்று வரை ஊனமுற்ற நிலையில் தவிக்கின்றார்.

இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் மனைவியைக் கொண்ட இவரது குடும்பம் இவரை நம்பியே வாழ்ந்து வந்தனர், மேற்குறித்த எதிர்பாராத சோக நிலையையடுத்து இவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியால் அன்றாட உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகிறது. இடுப்புக்கு கீழ் இயக்கமற்ற நிலையினால் அவதியுறும் கணவனை வைத்துக் கொண்டு சுமார் நான்கு வருடங்கள் எவ்வித வருமானமுமின்றி பசியுடனும் பட்டினியுடனும் இவரது மனைவியும் கஷ்டப்படுகிறாள்.

இவரது வைத்திய செலவுக்கு அதிகம் பணம் தேவையாகும் அதே வேளை தனது குடும்பத்தின் நாளாந்த உணவுக்கும் உதவிகளை இவ்விளம் தந்தை மக்களாகிய உங்களிடம் வேண்டி நிற்கிறார். முதுகந்தண்டு உடைந்துள்ளமையால் அதனை அறுவை சிகிச்சை செய்யவும், இடுப்புக்கு கீழ் ஒன்றும் இயங்காத நிலை இருப்பதால் அதனை சுகப்படுத்தவும் பல இலட்ச ரூபாய் பணங்கள் தேவைப்படும் அதே சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக முதுகந்தண்டுக்கும், காற்களுக்கும் அவை நேராக அமைவதற்காக “நீகார்ட்” என்னும் விலையுயர்ந்த bandage உம் தேவைப்படுகிறது.

மேலும் சிறுநீர் கழிப்பதற்காக சிறு குழாய் பொருத்தப்பட்டிருப்பதால்  Shopping பையில் தான் சிறுநீரைக் கழித்து வருகிறார், தனது ஓலைக் குடிசையில் comet வசதி இல்லாததால் மலம் கழிப்பதற்கு அதிகம் கஷ்டப்படும் இவ்விளம் தந்தையின் கஷ்டங்கள் நீங்கி நோயிலிருந்து சுகமடைந்து சாதாரான வாழ்க்கைக்கு திரும்ப மக்களாகிய உங்களிடம் பின்வரும் உதவிகளை வேண்டி நிற்கிறார்.

1. தற்காலிகமாக முதுகந்தண்டு மற்றும் காற்களுக்கு “நீகார்ட்” எனும் bandage ஐ வாங்கித் தருதல் அல்லது அதற்கான பண உதவிகளை வழங்குதல்

2. சரியாக அமர்ந்து மலம் கழிப்பதற்கு வீட்டில் (குடிசையில்) comet வசதியை  ஏற்படுத்தி தருதல்

3. குடும்பத்தின் அன்றாட வாழ்வாரத்திற்காக பணம் மற்றும் பொருள் உதவி வழங்குதல்

4. இவரது உடைந்த முதுகந்தண்டு மற்றும் செயலிழந்த இடுப்பு, காற் பகுதிகளை சிகிச்சை செய்து குணப்படுத்துவதற்காக இயலுமான பண உதவிகளை வழங்குதல்

மேற்குறிப்பிட்ட உதவித் தேவைகளில் ஏதேனுமொன்றுக்காக உதவி செய்து இவரையும் இவரது குடும்பத்தையும் கஷ்டத்திலிருந்து மீற்போம்.

நோயுக்குள்ளான முஸம்மில் என்றழைக்கப்படும் ஜுனைதீன் ஹபீல் என்பவரது ஒரேயொரு இலக்கத்திற்கு அழைப்புவிடுத்து விசாரித்து உறுதிப்படுத்தியதன் பின்பு பின்வரும் வங்கிக் கணக்கிற்கு  நீங்கள் உங்கள் பணங்களை அனுப்பி உதவிகளை வழங்கலாம்.

தொலைபேசி இலக்கம்: 0094 773424718

வங்கிக் கணக்கு: 
A.L.S. Nasrin
Sampath  Bank 
A/C: 118554479820
Ninthavur Branch

குறிப்பு: மேலே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் வங்கிக் கணக்கைத் தவிர வேறு எந்த இலக்கத்தின் மூலமாகவும் அழைப்பு வந்தாலோ, வேறு வங்கிக் கணக்கு கிடைத்தாலோ அவை ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவையல்ல. அத்தோடு தேவையான அனைத்து ஆவணங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

“ஓர் அடியான் மற்றொரு சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்கிறான்” எனும் நபியின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு இவ்வடியானுக்கு உதவி செய்து குடும்பத் தலைவனை மீட்டெடுப்போம்.

நட்புடன் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா
26/03/2018
நோயினால் அவதியுறும் வறிய குடும்பத் தலைவனைக் காப்போம். நோயினால் அவதியுறும் வறிய குடும்பத் தலைவனைக் காப்போம். Reviewed by nafees on 21:55 Rating: 5

No comments:

Powered by Blogger.