சிங்கள , முஸ்லிம், தமிழ் நண்பர்கள் இணைந்து மாடுகள் களவாடி வந்த சம்பவத்தின் விபரம்.

( ஐ. ஏ. காதிர் கான் )
கூலி அடிப்படையில் பெற்றுக்கொண்ட வாகனங்களில் நண்பர்களாக இணைந்து மாடுகளைக் களவாடி
வந்த சிங்கள , முஸ்லிம், தமிழ் நண்பர்கள் ஆறு பேர் ஜா - எல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 3 வாகனங்களும், 14 மாடுகளும் கைப்பற்றப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹைபிரேட் கார் ஒன்றும், வான் ஒன்றும், பட்டா வகை லொறி ஒன்றுமே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க, கட்டான, பமுனுகம, சிலாபம், தப்போவ போன்ற இடங்களைச் சேர்ந்த இந்த ஆறு பேரும் நண்பர்களாக ஒன்றிணைந்து இவ்வாறு மாடுகளை நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் களவாடி, இறைச்சிக்காக இறைச்சிக் கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா - எல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷ்ஷங்க சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிங்கள , முஸ்லிம், தமிழ் நண்பர்கள் இணைந்து மாடுகள் களவாடி வந்த சம்பவத்தின் விபரம்.
Reviewed by nafees
on
02:52
Rating:
Reviewed by nafees
on
02:52
Rating:
No comments: