தெல்தெனிய, மாதம்பை போல் நொச்சியாகமயிலும் (குடிவெறியில்) சிங்கள இளைஞர் மீது தாக்குதல்.

தெல்தெனியவில் முஸ்லிம் இளைஞர்களால் சிங்கள வாலிபர் தாக்கபட்டு கண்டிக் கலவரம் உருவாகி அடங்கிய
நிலையில் நேற்று சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர் (குடிவெறியில்) சிங்கள இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள இளைஞர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தாக்குதல் நடத்தியவர் கைதான சம்பவம் அறிந்ததே.
இந்நிலையில் நேற்று மாலை அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்திலும் இதே போன்றதொரு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச சபையில் வேலைபார்க்கும் பெரும்பான்மை சிங்கள நபர் ஒருவரை டவுனில் வைத்து காரில் வந்த முஸ்லிம் நபர் தாக்கியதாக குற்றம் சுமத்தபட்டதுள்ளது.
தாக்கிய நபர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யபட்டுள்ளதுடன் தாக்கபட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
தாக்கபட்ட நபரின் ஆதரவாளர்கள் இது தொடர்பில் சலசலப்புகளை உருவாக்கவே அங்கு தற்போது போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீசார் உடனடியாக தலையிட்டு பிரச்சினையை வளரவிடாமல் தடுத்ததால் நிலைமை தற்போது சுமுகமாக இருப்பதாக மேலும் தெரிவிக்கபடுகிறது.
- முபீன் அனுராதபுரம் -
தெல்தெனிய, மாதம்பை போல் நொச்சியாகமயிலும் (குடிவெறியில்) சிங்கள இளைஞர் மீது தாக்குதல்.
Reviewed by nafees
on
20:53
Rating:
Reviewed by nafees
on
20:53
Rating:
என்னப்பா முஸ்லிம் குடிகாரர்களா? முஸ்லிம் ஹராமானவைகளை குடிக்கவும், உண்ணவும் மாட்டானே! இயக்க வெறி கொண்டு இப்படியான குடிகாரர்களை பாவித்து அடுத்த இயக்கத்தை தாக்கியவர்களே இனியும் வேண்டாம் இயக்க வேறுபாடு,இயக்க வேறுபாடு மறந்து ஹராத்தை ஹராம் (வட்டி,குடிபானங்கள்,சில திருமணங்கள்,சில அக்கீக்கா சாப்பாடு,......) என்று தெளிவாக சொல்வோம் இதில் ஒன்று படுவதில் நல்ல முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteAll Ceylon Jamiyyathul Ulama, has to take action on this, they have to issue a statement about the people in Muslim community who are addicted to intoxicating objects. If we don’t take an action against them now this would leads to a big problem.
ReplyDeleteWe should make a public announcement that this kind of people are not falling to Ceylon Muslims category and are not responsible of their action whatsoever.