முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பெரும்பாலான சிங்களவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் ; மஹிந்த தேஷப்பிரிய

அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் சிங்கள மக்களில்
பெரும்பான்மையானவர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
SLDIA வில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளை சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்பவில்லை என கூறுவது தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லீம்கள் தங்களை இலங்கையர்களாக ஆக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம்களை அவர் அறிவுறுத்தியதோடு, நாட்டில் அல்லது உலகில் எந்தவொரு கலப்பில்லாத எந்த ஒரு சமூகமும் இல்லை என்று சிங்கள மக்களை நினைவூட்டினர்.
அராபிய கலாசாரத்தின் சில அம்சங்களை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுவது எறியும் நெருப்புக்கு மேலும் எண்ணெய் வார்க்கிறது.இதனால் முஸ்லிம் பெண்கள் சமூகத்தால் அவமதிக்கப்படுவதுடன் காலான் போன்று முளைக்கும் முஸ்லிம்களால் நடத்தப்படும் சர்வதேச பாடசாலைகளுக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பெரும்பாலான சிங்களவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் ; மஹிந்த தேஷப்பிரிய
Reviewed by nafees
on
21:22
Rating:
No comments: