கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்ற தீர்மானங்களை எடுப்பதற்கு தாம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை
போராடுகின்ற தீர்மானங்களை எடுப்பதற்கு தாம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை." என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தனித்துவத்துடன் பயணிக்கவேண்டிய பாதை குறித்து தயக்கமில்லால் முடிவெடுக்கின்ற காலத்தில் தாம் இருப்பதாகவும், நேற்றைய தினம் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் "நாட்டின் இரு தலைமைகளுக்கு மத்தியில் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை என்ற யுத்தம் நடந்து, ஏதோவொரு வகையில் முடியப்போகிறது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸை பகடையாக வைத்து ஏதோவொரு தரப்பு குளிர்காயப் பார்க்கிறதா என்பதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதன்மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. நாங்கள் பதவி ஆசை பிடித்தவர்களல்ல.
சர்வதேச சமூகத்துக்கு முன்னால் இலங்கை தலைகுனிந்து நின்கின்ற நிலவரத்தை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்படுத்தியுள்ளன. நல்லாட்சியை கொண்டுவந்த சக்திகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த உணர்வலைகள் எங்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்ற தீர்மானங்களை எடுப்பதற்கு தாம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை
Reviewed by nafees
on
06:16
Rating:
Reviewed by nafees
on
06:16
Rating:

இதுக்கு முந்தி இங்க சமுகத்துக்காக பதவியை தூக்கி வீசிய சந்தர்ப்பம் ஒன்றை கூற முடியுமா? கதைய பார்த்தா நம்பிக்கையில்லா தீர்மானத்தை வைத்து கோடிகளுக்கு வளையிற மாதிரி தெரியுது.
ReplyDeleteChumma aponga baas, comedy pannama.
ReplyDeleteJoke 2018.
ReplyDelete