(வீடியோ) பேஸ்புக்கில் ஏதாவது ஒரு தகவலை பரிமாற்றி கொள்வது இலங்கையின் சட்டத்திற்கமைய தவறு அல்ல.


சமூக வலைத்தளம் ஊடாக ஏதாவது ஒரு தகவலை பரிமாற்றி கொள்வது இலங்கையின் சட்டத்திற்கமைய தவறு அல்ல என சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சங்க தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

இன்று 3 பிள்ளைகளின் கல்வி உரிமையை இந்த அரசாங்கம் இழக்க செய்துள்ளது. பேஸ்புக்கில் ஏதோ ஒன்றை பகிர்ந்தமையினால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டத்திலேயே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடையவர்கள் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. மின்னஞ்சல் ஒன்றை பகிர்வது இலங்கை சட்டத்தில் தவறு அல்ல.

ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் ஊடுறுவிய மாணவன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஏன் இந்த இரட்டை நடைமுறை? சமமான நீதி எங்கே?

அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் மனித உரிமையை மீறினால் அமைதியாக இருக்க வேண்டாம். அந்த நேரத்திலேயே சத்தமிடுங்கள். முடிந்தால் அதனை காணொளியாக பதிவிட்டு இணையத்தில் வெளியிடுங்கள். பொலிஸ் அதிகாரி யாரையாவது தாக்கினால் அதனை பயமின்றி காணொளியாக பதிவிட்டு இணையத்தளத்தில் பதிவேற்றுங்கள்.

அதற்கு எதிராக யாரையும் கைது செய்ய முடியாது. மதிய நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்கின்றனர். கிராண்ட்பாஸ் பகுதியில் தலையை கொண்டு வந்து போடுகின்றார்கள். இவ்வாறான தவறுகள் செய்ய முடியும். இவற்றிற்கு விசேட நீதிமன்றங்கள் கிடையாது. அப்படி என்றால் இது தான் நீதியான சட்டமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரின் உரை வீடியோ :
 
(வீடியோ) பேஸ்புக்கில் ஏதாவது ஒரு தகவலை பரிமாற்றி கொள்வது இலங்கையின் சட்டத்திற்கமைய தவறு அல்ல. (வீடியோ) பேஸ்புக்கில் ஏதாவது ஒரு தகவலை பரிமாற்றி கொள்வது இலங்கையின் சட்டத்திற்கமைய தவறு அல்ல. Reviewed by nafees on 20:34 Rating: 5

No comments:

Powered by Blogger.