பாததும்பரை பிரதேச சபையில் பொதுஜன பெரமுன - ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்தது. ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

பாததும்பரை பிரதேச சபையில் பொதுஜன பெரமுன உடன் இணைந்து ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதற்கு அமைவாக பொதுஜன பெரமுன கட்சியின் அசங்க அபேசிங்க (சூட்டி அய்யா) சபை தலைவராகவும் சுதர்மா வெலகெதர பிரதி தலைவராகவும் எதிர்வரும் ஏப்ரல் 4 இல் பதவி ஏற்க உள்ளனர்.
இந்நிகழ்வு சட்டத்தரணி ஹேரத் சாட்சியாக வைத்து தொரகமுவ வசந்த போப்பே கெதர மந்திரியின் வீட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மடவளை அபூ உற்பட இருகட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டு ஒப்பந்தத்தின் சாட்சிகளாக செயல்பட்டனர்.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாததும்பரை பிரதேச சபை தேர்தல் தொகுதியில், ஐக்கிய தேசியக்கட்சி போனஸ் உள்ளடங்கலாக 11 ஆசனங்களை பெற்றிருந்த அதேவேளை, பொதுஜன பெரமுன 15 ஆசனங்களையும், சுதந்திரக்கட்சி 3 ஆசனங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






பாததும்பரை பிரதேச சபையில் பொதுஜன பெரமுன - ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்தது. ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
Reviewed by nafees
on
23:24
Rating:
Reviewed by nafees
on
23:24
Rating:
No comments: