சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு... மடவளை ஹில்கன்றி சர்வதேசப் பாடசாலை.. பாடசாலை மாணவிகள் வரலாற்று சாதனை.



கடந்த வருடம் நடைபெற்ற கல்விப்பொது தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளில் ஹில்கன்றி சர்வதேசப்  பாடசாலை மாணவிகள் பாத்திமா
ஹப்ஸா ஹிதாயத்துல்லாஹ் மற்றும் ஷஸ்னா ரஸாத் ஆகிய மாணவிகள் 9A சித்திகளையும் ரஹ்மா ரஸ்லான் 8A, 1B சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இது தொடர்பில் கல்லூரி முதல்வர் அதிபர் A.A.M ஜாஸில் கருத்து தெரிவிக்கையில் :- எமது கல்லூரியில் சென்ற வருடம் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய 84% வீதமான மாணவ,மாணவிகள்   அதிகூடிய பெறுபேறுகளை பெற்று  எமது கல்லூரிக்கு பெருமை தேடித்தந்திருக்கின்றார்கள்.

இந்த பெறுபேறுகளுக்கு உழைத்த பாடசாலை நிர்வாகக் குழு,பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ,  மாணவிகள்  அனைவருக்கும் எமது கல்லூரி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பாராட்டு நிகழ்வினை செய்யவுள்ளதாக  தெரிவித்தார்.
சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு... மடவளை ஹில்கன்றி சர்வதேசப் பாடசாலை.. பாடசாலை மாணவிகள் வரலாற்று சாதனை. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு... மடவளை ஹில்கன்றி சர்வதேசப் பாடசாலை.. பாடசாலை மாணவிகள் வரலாற்று சாதனை. Reviewed by nafees on 21:44 Rating: 5

No comments:

Powered by Blogger.