நான் சவுதி மன்னராவதை மரணத்தால் மட்டுமே தடுக்க முடியும் ..



தான் சவுதி அரேபியாவின் மன்னராவதை  மரணத்தால் மட்டுமே தடுக்க முடியும் என சவுதி
அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல சீ என் என் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் சவுதி மன்னராவதை தனது மரணத்தால் மட்டுமே தடுக்க இயலும் என கூறியுள்ள அவர் இறைவன் தனக்கு நீடித்த ஆயுளை வழங்கினால் தான் எதிர்வரும் அரை நூற்றாண்டு காலத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னராக இருப்பேன் என கூறியுள்ளார்.

தங்கள் நாட்டில் பெண்களுக்கு உரிய சம உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் திரையரங்குகள் திறக்கப்படுள்ளதாகவும் கூறியுள்ள அவர் அங்குள்ள  மக்கள் மற்றைய நாட்டு மக்களை போன்று சுதந்திரமான ஒரு வாழ்கையை நோக்கி திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது இளவரசர் முஹம்மதின் தந்தை சல்மான் சவுதி மன்னராக இருக்கும் அதேவேளை அவருக்கு அடுத்ததாக முடிக்குரிய இளவரசராக முஹம்மத் உள்ளார்.

நான் சவுதி மன்னராவதை மரணத்தால் மட்டுமே தடுக்க முடியும் ..  நான் சவுதி மன்னராவதை  மரணத்தால் மட்டுமே தடுக்க முடியும் .. Reviewed by nafees on 00:31 Rating: 5

No comments:

Powered by Blogger.