அப்டேட்.. காணாமல்போன மத்ரஸா மாணவர்கள் மீட்பு!
இன்று (25.03.2018) பிற்பகல் மகரகமயில் இருந்து காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மகரகம கபூரியா அரபு கல்லூரி மாணவர்கள் இருவரும் சற்றுமுன் (22:30) கொழும்பு-கந்தளாய் பஸ்ஸில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மாணவர்களது தந்தை எமக்கு தெரிவித்தார்.
புத்தளம் பகுதி மாணவர் ஒருவருடன் சேர்ந்து இவர்கள் இருவரும் மத்ரஸா நிர்வாகத்திற்கு அறிவிக்காமல் திடீரென வெளியேறி வந்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.
தனது இரு பிள்ளைகளையும் தேடி கண்டு பிடிப்பதற்காக உளப்புய்ர்வமாக துஆ செய்தவர்களுக்கும் குறித்த செய்தியை அதிகமதிகம் சமூகவலை தளங்களில் பகிர்ந்து உதவிய அத்தனை அன்பர்களுக்கும் தான் நன்றி கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
அப்டேட்.. காணாமல்போன மத்ரஸா மாணவர்கள் மீட்பு!
Reviewed by nafees
on
11:12
Rating:
No comments: