பொதுஜன பெரமுன முதன்மை வேட்பாளர் சமீம் இக்பால் அதுரலிய பிரதேச சபை உறுப்பினராக தெரிவு.


தென் பகுதி மாத்தறை மாவட்ட அதுரலிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக
முதன்மை வேட்பாளராக சமீம் இக்பால் அவர்கள் போட்டியிட்டு கொடபிடிய வட்டராத்தில் 1152 வாக்குகளை பெற்று 2ம் முறையும் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கொடபிடிய வட்டாரத்திற்கு பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை இன மத பேதமின்றி மேற்கொண்டார்.

கிராமிய கல்வி அபிவிருத்தி, உள்ளூர் வீதிகள் புணரமைப்பு, பாதையோர மின்குமிழ் பொருத்துதல், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு, கிராமிய நலன்புரி அமைப்புகளுக்கான நிதி உதவி, கொரியா நாட்டு வேலை வாய்ப்பு என சுமார் 5.5 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை கொடபிடிய வட்டாரத்தில் மேற்கொண்டுள்ளார்.

இம்முறை தம்மிடம் தேசிய அரசாங்கம்  இல்லாவிடினும் அதுரலிய பிரதேச சபையில் நாம் ஆட்சி அமைத்தோம். எனவே ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்பாக  கொடபிடிய வட்டராம் உட்பட அதுரலிய பிரதேச சபையில் மீண்டும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

அதுரலிய பிரதேச சபை உட்பட கொடபிடிய வட்டார மக்கள் இம்முறை எதிர்பார்க்கும் பிரதான அபிவிருத்தி திட்டம் வெள்ள அனர்த்தத்திற்கு நிரந்தர தீர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

ibnu asad -
பொதுஜன பெரமுன முதன்மை வேட்பாளர் சமீம் இக்பால் அதுரலிய பிரதேச சபை உறுப்பினராக தெரிவு. பொதுஜன பெரமுன முதன்மை வேட்பாளர் சமீம் இக்பால் அதுரலிய பிரதேச சபை உறுப்பினராக  தெரிவு. Reviewed by nafees on 00:46 Rating: 5

No comments:

Powered by Blogger.