அக்குறணை முஸ்லிம்களுக்கு தனியான தேர்தல் தொகுதி உருவாக்குவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

-ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி மாவட்டத்தில் அக்குறணைப் பிரதேச முஸ்லிம்களுக்கு தனியான தேர்தல்
தொகுதியை
உள்ளடக்கும் வகையில் எல்லை நிர்ணயத்தில் மாற்றங்கள் செய்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அதற்காக பூஜாப்பிட்டிய பிரதேச சபைப்பிரிவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய மாகாண சபை அங்கத்தவர் குனதிலக்க ராஜபக்ச தெரிவித்தார்.
(20.3.2018)மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு பல்லேகலை மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவிததார்.
சபைத் தலைவர் எல்.டி. நிமலசிரி தலைமையில் நடை பெற்ற இவ் அமர்வில் தனி நபர் பிரேரனை மீதான உரையிலே அவர் மேலும் தெரிவித்தாவது-
ஹாரிஸ்பத்துவ தொகுதி ஒருகாலத்தில் கடுகண்ணாவைத் தொகுதியுடன் இருந்தது. அக்காலத்தில் சிங்கள மரைக்கார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு முஸ்லிம்தான் பாராளுமன்றப் பிரதி நிதியாக இருந்தார்.
அதன் பின் ஏ.சீ.எஸ். ஹமீத் இருந்தார். விகிதாசார தேர்தல் முறையில் தேர்தல் நடக்கும் 45 வருடங்கள் தொடர்ந்து முஸ்லிம் பிரதிநிதியே இருந்து வந்துள்ளார். ஏ.சீ.எஸ். 1மீத் ஒரு சிங்களத் தாய்க்குப் பிறந்திருந்தால் அக்காலத்தில் அவர்தான் நாட்டின் பிரதமராக இருந்திருப்பார்.
அவ்வாறு முஸ்லிம்களும் பௌத்தர்களும் மிக ஐக்கியத்துடன் வாழ்ந்துவரும் தொகுதிதான் ஹாரிஸ்பத்துவ. அதில் பூஜாப்பிட்டிய, அக்குறணை, ஹாரிஸ்பத்துவ என மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகள் உண்டு.அதில் அக்குறணையை தனி அலகாக மாற்ற எடுக்கும் முயற்சிக்கு தாம் எதிர்ப்பில்லை. ஆனால் பூஜாப்பிட்டியை இரண்டா உடைத்து ஹத்தரலியத்தை உடனும் அக்குறணையுடனும் சேர்க்க திட்மிடப்பட்டுள்ளதாக அறிகிறோம்.அதற்கு நாம் உடந்தையாக முடியாது. மாற்று வழியாக ஹாரிஸ்பத்துவையை இரட்டை அங்கத்தலர் தொகுதியாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன் கடந்த இன வன்முறையில் பூஜாப்பிட்டியவில் 53 சம்பவங்களே பதிவானதாகவும் அதில் 12 வாகனங்களும் ஒரு வணக்கஸ்தலமும் மட்டுமே தாக்கப்பட்தாகவும் பேஷ்புக், உற்பட சமூக வளைத் தளங்கள் பொய் பிரசாரத்தை மேற்கொண்டே இவை நடந்துள்ளன. எனவே அவற்றை உடன் தடை செய்தது நல்ல விடயம் என்றார்.

Reviewed by nafees
on
04:45
Rating:
Reviewed by nafees
on
04:45
Rating:
No comments: