கண்டி வன்செயலால் பாதிக்கபட்டவர்களுக்கு மாவனல்லை ஜே.எம் மீடியா செய்த உதவி.


அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட
ஒரு சிலரின் நேர்காணல் வீடியோக்களை மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனம் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது.

உணர்வுமிக்க அந்த வீடியோக்களைப் பார்வையிட்ட பல மக்கள் இன ஜாதி வேறுபாடுகளின்றி வழங்கிய ஒரு தொகை பணத்தை, கண்டி திகன கும்புக்கந்துரையை தலைமையகமாக கொண்டு இயங்கும் திகன நிவாரண முகாமைத்துவ பகுதிக்கு ஜே.எம் மீடியா நிறுவனம் உத்தியோர்பூர்வமாக வழங்கி வைத்தது.

ஜே.எம் மீடியா சமூக சேவை பகுதி சார்பில் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஸா மல்ஹர்தீன் மற்றும் முஹம்மட் முனாஸ் ஆகியோர் குறித்த பணத்தை வழங்கிவைக்க திகன நிவாரண முகாமைத்துவ பகுதி பொருப்பாளர்களான ஆசிரியர் மூஸா கலீம் (நளீமி) மற்றும் முஹம்மத் ஹாபிஸ் ஆகியோர் பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.
கண்டி வன்செயலால் பாதிக்கபட்டவர்களுக்கு மாவனல்லை ஜே.எம் மீடியா செய்த உதவி. கண்டி வன்செயலால் பாதிக்கபட்டவர்களுக்கு மாவனல்லை ஜே.எம் மீடியா செய்த உதவி. Reviewed by nafees on 21:35 Rating: 5

No comments:

Powered by Blogger.