எதிரிகளுடன் போராடுவது என்றால் துப்பாக்கியும் குண்டும்தான் என நம் சமூகம் நினைத்துக் கொண்டுள்ளது.

எதிரிகளுடன் போராடுவது என்றால் என்னவென்று நம் சமூகத்துக்கு சரியாக தெரியவில்லை. போராட்டம் என்றால் துப்பாக்கியும் குண்டும்தான் என நினைக்கிறார்கள்.
முதலில் எதிரி நம்மை நோக்கி எந்த ஆயுதத்தை முதலில் பிரயோகிக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது சமூகத்துக்கெதிரான முதல் யுத்தம் ஊடகமாகும்.
சம்பிக்க ரணவக்க இதனை புத்தகம் வெளியிடுவதன் மூலம் ஆரம்பித்து வைத்தார். இதற்கு முஸ்லிம்கள் சிங்கள மொழியில் மறுப்பு புத்தகம் எழுதி போராடவில்லை.
சம்பிக்க, ஹாமதுருமார் போன்ற இனவாதிகள் பாராளுமன்றத்துக்கு சென்று முஸ்லிம்களுகெதிராக பேசிய போது அவர்களை எதிர்த்து பேசக்கூடிய அரசியல் அறிவுள்ள தனித்துவமான உலமாக்கள் எவரையும் நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பவில்லை.
ஞான சார போன்றோர் ஹலாலுக்கெதிராக கத்திய போது இதனை உலமா சபை சிங்கள மொழியில் மறுப்பு தெரிவிக்கவில்லை. பொது பல சேனா மஹிந்த அரசின் மேல் மட்டத்தின் அணுசரணையுடன் செயற்பட்ட போது மஹிந்த அரசுடன் நெருக்கமான உலமா கட்சியை பலப்படுத்துவதன் மூலம் மஹிந்த அரசின் அனுசரணையை பயன் படுத்த உலமா சபையும் முஸ்லிம் சமூகமும் முன் வரவில்லை.
சமூக வலையத்தளங்கள் மூலம் வெறுப்பு பேச்சு முன் வைக்கப்பட்ட போது அதே ஆயுதத்தை சிங்கள மொழி தெரிந்த முஸ்லிம்கள் பயன்படுத்தவில்லை.
இப்போது சிங்கள பயங்கரவாதிகள் துப்பாக்கி எடுத்துக்கொண்டு தாக்க வரவில்லை. பெரும்பாலும் கத்தி, கல், பொல்லுடன்தான் வந்தனர். இவற்றை தற்காப்புக்கு ஏந்தி போராடலாம் என்பது கூட முஸ்லிம்களுக்கு புரியவில்லை.
ஆகவே எம்மை நோக்கி எவ்வாறு போர் தொடுக்கப்படுகிறதோ அவ்வாறே நாமும் போர் செய்ய வேண்டும். போர் என்று வரும் போது இரு பக்கமும் அழிவுகள் வரும். ஆனாலும் அழிவுகளின் பின்னர் சமரசம் ஏற்படுவதே உலக நியதி.
துஆ, குனூத் என்பதெல்லாம் போராடிக்கொண்டே செய்ய வேண்டியவையே தவிர போராடாத கோழைச் சமூகத்திற்கானதல்ல.
முஸ்லிம்கள் நாம் யாருக்கெதிராகவும் முதலில் போராட்டத்தை ஆரம்பிக்க கூடாது. அதேவேளை எம்மை நோக்கி போர் தொடுக்கப்பட்டால் அதனை அகிம்சை வழியிலேனும் தடுக்க முற்பட வேண்டும். அந்த வழிகளில் ஒன்றுதான் ஜனநாயக அரசியல் பலமாகும். அதனை நாம் ஆளுந்தரப்பு என்று மட்டும் இருக்காது எதிர் தரப்பிலும் இருக்கக்கூடிய வகையில் அமைக்க வேண்டும்.
- முபாறக் அப்துல் மஜீத்
எதிரிகளுடன் போராடுவது என்றால் துப்பாக்கியும் குண்டும்தான் என நம் சமூகம் நினைத்துக் கொண்டுள்ளது.
Reviewed by nafees
on
02:28
Rating:
Reviewed by nafees
on
02:28
Rating:
No comments: