ஞாபகமிருக்கிறதா? இன்னேரம் மறந்திருக்க வேணுமே! (நினைவு காட்டினாலும் சிலருக்கு கோபம் வரக்கூடும்)


எவ்வளவு புது டொபிக்குகள்... எவ்வளவு அரசியல் மாற்றங்கள்... எத்தனை கண் துடைப்புகள்.. மறந்திருக்க வேண்டுமே..
நினைவு காட்டினாலும் சிலருக்கு கோபம் வரக்கூடும்.


 இதையே நினைத்துக்கொண்டிருக்க ஏலுமா? கொஞ்சம் ரிலாக்ஸாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கவேண்டாமா? என்று அவர்கள் பொருமுவதும் கேட்கிறது.

நிற்க, அன்று பாதையோரப்படிக்கட்டில் நிர்வாணமாக தலையில் கைகளை வைத்துக்கொண்டு முகம் புதைத்திருந்தான் தமிழன். (பார்க்க படம்)


 தனது நிர்வாணத்தை அவன் நொந்து கொள்ளவோ தனது கையறு நிலையினை பற்றி கவலை கொள்ளவோ அவனால் முடிந்திருக்கவில்லை! தனது தலை விதியை நொந்து கொண்டான். சிங்களவன் அதைப்பார்த்து எக்காளமிட்டுச்சிரித்தான்!


 திகனை பற்றியெரிந்து அதன் சுவாலை தெல்தெனிய வழியாக நகர்ந்து கடுகஸ்தோட்டையினை எரித்து அகுறனையினை ஆக்கிரமித்த பொழுதொன்றில் இரவு வீதியின் படிக்கட்டொன்றில் எனது இனத்தவன் ஒருவனும் நாதியற்று குந்தியிருந்தான்.... அவனை பார்த்து சிப்பாய்கள் கெக்கலி கொட்டி சிரித்தன!

ஜூலைக்கலவரத்தை போலதான் கண்டியின் மார்ச் கலவரமும் ...

தமிழனைப்போல நம்மவனும் தலையில் கைகட்டி புகை வழியே தனது அழிவுகளை பார்த்துக்கொண்டு நின்றான்...

ஜூலைக்கலவரத்தை போலதான் கண்டியின் மார்ச் கலவரமும்...

அப்போது தொலைக்காட்சிப்பெட்டிகளை தூக்கிக்கொண்டோடிய திருட்டு பெருந்தேசியவாதக்கூலிகள் இன்று ஐபோன்களை கொள்ளையடித்துக்கொண்டு ஓடினார்கள்...

ஒரே கலவரம் ஜூலைக்கலவரம் 3000 உயிரிழப்புகள் கோடிகளில் நஷ்டம் தமிழனுக்கு ரோசம் வந்தது. தனக்கு வாழிடம் மறுக்கப்பட்ட தேசத்திடம் தனியே வாழ நாடு கேட்டு போராடினான்... இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறான்.


நமக்கு அளுத்கமையில் கலவரம் வந்தது ஜிந்தோட்டையில் கலவரம் வந்தது அம்பாரையில் கலவரம் வந்தது கண்டியில் கலவரம் வந்தது தமிழனுக்கு ஒரே ஒரு கலவரம் வந்தது அது ஜூலைக்கலவரம்.

நமக்கு கலண்டரில் உள்ள 12 மாதங்களின் பெயராலும் கலவரம் வந்தாலும்.... ரோசம் வராது! ஏனென்றால் கோழைத்தனம் குடிகொண்ட பட்ட சோம்பேறிகளாக இருக்கிறோம்.

கிரிக்கட் சண்டை பிடிக்க அரசியல்காரனுக்கு சொம்பு தூக்க முட்டையில் மயிர் பிடுங்க ஒன்றுமில்லாத வீணாய்போன வம்புகளை விலை கொடுத்துப்பேச என காலம் கரைகிறது!


எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த ரவுண்ட் உடமைகளை மட்டும் இலக்குவைத்ததாக இராது!
 இதை விடப்பெரிய ஒப்பாரியும், ஓலமும் கேட்கும்.

- முஜீப் இப்ராஹீம் : மடவளை நியூஸ் -
22/03/2018
ஞாபகமிருக்கிறதா? இன்னேரம் மறந்திருக்க வேணுமே! (நினைவு காட்டினாலும் சிலருக்கு கோபம் வரக்கூடும்) ஞாபகமிருக்கிறதா? இன்னேரம் மறந்திருக்க வேணுமே! (நினைவு காட்டினாலும் சிலருக்கு கோபம் வரக்கூடும்) Reviewed by nafees on 05:05 Rating: 5

1 comment:

  1. இது ரஸுலுல்லாஹ் சொன்ன வஹ்ன் முஜீப் இப்ராஹிம் சகோதரர் அவர்களே! இதிலிருந்து விடுபட அ இ ஜ உ , மற்றும் இயக்கங்களின் தலைமைகள் மாறி எமக்கு உறுதிமிக்க தலைமை வேண்டும் அதோடு எமது தக்வா மேலோங்க இஸ்லாமியர்களாக (வட்டி தவிர்த்த வியாபாரம், வட்டி தவிர்ந்த எல்லா கொடுக்கல் வாங்கள், ஏழைகளின் துயர் துடைக்க செல்வந்தனும், அநீதி இலக்கப்பட்டவனின் பதுஆ வுக்கு அச்சமுள்ள முஸ்லிமாக,...........) நாம் மாற வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.