கண்டி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கிண்ணியா மக்களின் உதவிகள் வந்தடைந்தன.

-ஹஸ்பர் ஏ ஹலீம் -
கண்டி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கிண்ணியா பகுதியில் சேகரிக்கப்பட்ட நிதி நேற்று
ஞாயிற்றுக் கிழமை(18) கண்டிக்கு சென்று கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி தலைமையிலான குழுவினர் இதனை கையளித்தனர்.
கண்டி கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிவாரனத்தொகை (1.5 மில்லியன் பணம் கண்டி மாவட்ட உலமாசபையின் தலைமையில் பல்வேறு அமைப்புக்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள KRCC இல் மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் உமர்தீன் ஹஸரத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாதிப்பிகுள்ளான திகன, தெல்தெனிய,தென்னகும்புர பிரதேசங்களை அடைந்து மக்களுடன் கலந்துரையாடலும் இடம் பெற்றது கிண்ணியா உலமாசபை,ஷுரா சபையின் பிதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
கண்டி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கிண்ணியா மக்களின் உதவிகள் வந்தடைந்தன.
Reviewed by nafees
on
22:34
Rating:
Reviewed by nafees
on
22:34
Rating:
No comments: