மடவளை அபூ இன்று முதலமைச்சர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


சென்ற மாதம் இடம்பெற்ற  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னனியில் பாத்ததும்பரை பிரதேச சபைக்கு மடவளை மடிகே வட்டாரத்திலிருந்து போட்டியிட்ட மடவளை அபூ அவர்கள் பட்டியல் ஆசனம் மூலம் அக்கட்சியால் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்று காலை பல்லேகலயில் அமைந்துள்ள மாகாண சபை  கட்டிடத்தில் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க  அவர்களின் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

47 தொகுதிகளை கொண்ட தெரிவான உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்த  குறித்த நிகழ்வில் எஸ். பி திசாநாயக்க உட்பட  கட்சியின் மாவட்டங்களினது நிர்வாக செயலாளர்கள் உதவி நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேசங்களினது நிர்வாக செயலாளரகள் உதவி நிர்வாக செயலாளர்களுடன் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

மடவளை அபூ இன்று முதலமைச்சர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். மடவளை அபூ இன்று முதலமைச்சர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். Reviewed by nafees on 02:37 Rating: 5

No comments:

Powered by Blogger.