மாணவி கடத்தல் முறியடிப்பு.

சிலாபம் இரணவில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கிராம மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த மாணவியின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாய் வெளிநாட்டில் வேலை வெய்து வருகின்றார். இதன் காரணமாக 11 வயதான குறித்த சிறுமி தனது பாட்டியின் பொறுப்பில் வாழ்ந்து வருவதாகவும், அம்பகந்தவில பிரதேச பாடசாலையில் 6ஆம் வகுப்பில் குறித்த சிறுமி கல்வி கற்பதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று மாலை பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கடத்த முயற்சித்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி கூச்சலிட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பாட்டியிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
பின்னர் பாட்டி அயலவர்களின் உதவியுடன் குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளார்.
இந்த நபர் யார் என இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாணவி கடத்தல் முறியடிப்பு.
Reviewed by nafees
on
21:08
Rating:
Reviewed by nafees
on
21:08
Rating:
No comments: