கண்டி வன்முறை விடயத்தில் கைது செய்யப்பட்ட யாரையும் நாம் பாதுகாக்க மாட்டோம். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

கண்டியில் இடம்பெற்ற வன்முறை போன்று இனிமேலும் இன வன்முறைகள் நடைபெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
அத்துடன் கண்டி வன்முறை விடயத்தில் கைது செய்யப்பட்ட யாரையும் நாம் பாதுகாக்க மாட்டோம். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இனவாதத்தை தூண்டும் வகையிலான வன்பேச்சுக்களை தடை செய்வது குறித்து சட்டத்தரணிகள் உதவி புரிய வேண்டும். மேலும் இது தொடர்பாக எதிர்வரும் காலங்களில் சட்டத்தரணிகளை சந்தித்து பேசுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 44 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு மிலோதா கட்டடத்தில் நடைபெற்றது. அங்கு பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
கண்டியில் இடம்பெற்ற வன்முறை போன்று இனிமேலும் இன வன்முறைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. அத்துடன் கண்டி வன்முறையாளர்கள் யாரையும் பாதுகாக்க மாட்டோம். இனவாதத்தை தூண்டும் வகையிலான வன்பேச்சுக்களை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். குறித்த சட்டங்களை உருவாக்குவதற்கு சட்டத்தரணிகள் உதவிபுரிய வேண்டும். எனவே இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் சட்டத்தரணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்.
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் அமெரிக்க தேர்தலின் போது கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்துள்ளது. இதன்படி பேஸ்புக்கில் உள்ள தனிநபர்களின் தகவல்களை சூட்சுமமாக பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை தற்போது இலங்கையிலும் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
கண்டி வன்முறை விடயத்தில் கைது செய்யப்பட்ட யாரையும் நாம் பாதுகாக்க மாட்டோம். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.
Reviewed by nafees
on
02:48
Rating:
Reviewed by nafees
on
02:48
Rating:
No comments: