மாதம்பையில் ஏற்பட்ட பதற்றநிலை விபரம்.


( ஐ. ஏ. காதிர் கான் )
   சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர்,  வயோதிப சிங்கள நபர் ஒருவர் மீது மேற்கொண்ட
தாக்குதலில்,  குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


   மாதம்பையில்  பேக்கரித் தொழிலில் ஈடுபடும் 27 வயதுடைய திருமணமான முஸ்லிம் நபர் ஒருவரே, இவ்வயோதிபரை 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு மாதம்பையில் வைத்துத் தாக்கியுள்ளார்.


இதன்காரணமாக, குறித்த வயோதிப நபரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, மாதம்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்பு அங்கிருந்து சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


   இந்நிலையில்,  மாதம்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் (18)  ஞாயிற்றுக்கிழமை இரவும்,  (19) திங்கட்கிழமை  அதிகாலையும் ஒருவித பதற்றநிலை காணப்படுகிறது.


   இதையடுத்து, கண்டிப்  பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதம் போன்று, மாதம்பை பகுதியிலும் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுமோ என, இப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கும்  ஒருவித பதற்றநிலை உருவாகியுள்ளது.


   எனினும், பொலிஸாரும் இராணுவத்தினரும் இப்பகுதியில்  பாதுகாப்பைப்  பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


   வயோதிபர்மீது தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் நபர் மாதம்பை பொலிஸாரினால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தற்போது பொலிஸ் காவலில் தடுத்து  வைக்கப்பட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
மாதம்பையில் ஏற்பட்ட பதற்றநிலை விபரம். மாதம்பையில் ஏற்பட்ட   பதற்றநிலை விபரம். Reviewed by nafees on 18:41 Rating: 5

1 comment:

  1. குடிகாரர்களை ஏன் முஸ்லிம்கள் லிஸ்டில் சேர்க்கிறீர்கள், அவர்களை எங்களின் சமூகத்திலிருந்து ஒதுக்கி விட்டதாக பகிரங்கமாக அறிவித்து ஒதுக்கி விடுமாறு மாதம்பை பள்ளிவாசல் நிர்வாகிகளை கேட்டுக்கொள்வதோடு இதன் பிறகாவது இயக்க வெறி இன்றி இஸ்லாத்தை சொல்லும் அடுத்த ஜமாத்துகளுக்கு சூழ்ச்சி செய்யாது இருக்குமாறும், ஒரு நடுநிலையாளனாக இந்த நேரத்தில் ஞாபப்படுத்துவது நல்லது என்று நினைக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.