இறுதி உளக்குமுறல்... மூதூர் சமூகத்திற்கு சமர்ப்பணம்.


இப்பதிவு
திருமலை அரசியல் வாதிகள் 
மூதூர் மஜ்லிஸ்அஸ் ஸுறா

பள்ளிவாசல் சம்மேளனம்
பிரதேச செயலகம்
மூதூர் ஜம்மியதுல் உலமா
மூதூர் அனைத்து சமூகத்திற்கு
சமர்ப்பணம்

மூதூர் என்பது பல இனங்களும் சகோதரத்துவமாக பல விட்டுக் கொடுப்புகளுடன் மிக சிறப்பாக வாழ்ந்து வருவது உண்மை

அந்த வகையில் இவ்வூரில் மண்வளம், இயற்கை காட்டுவளம், கல்மலை வளம், கடல்வளம் என்பன நிறைந்து இவ்வூரின் அன்றாட தேவையினை நிறைவு செய்யும் அதே சூழலில் இவ்வூறை அழகு படுத்தும் இயற்கை அம்சங்களாக இருந்து வருகின்றது,

இவ்வளத்தை மூதூர் (மூதூர்,தோப்பூர்.கிளிவெட்டி.மூதூர் கிழக்கு .ஈச்சிளம்பற்று,சேறுவில) எல்லா இனத்தை சேர்ந்த மக்களும் எதிர்கால சந்ததியினை கருத்திற் கொண்டு பயன்படுத்தி வந்தோம்.

ஆனால் அண்மைக்காலமாக மேற்கூறிய வளங்கள் மிக மோசமாக சுரண்டப்படுவதும் இதனால் பல உயிர்கள் விழுங்கபட்டிருப்பதனையும் எண்ணி மனம்நோகிறது,

இந்த விடயத்தில் பின்வரும் பல கேள்விகளுக்கு விடையளிப்பது யார் ?

01. இதுவரை 6முஸ்லிம் ,2 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேற்கூறிய தொழிலினை செய்யவந்த வாகனத்தினூடாக

02. இந்த நிமிடம்வரை பல பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அரசியல் வாதிகளால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கான நடவடிக்கை என்ன?

03. இவர்களுக்கான மிதமிஞ்சிய தொழில் செய்வதற்கான அனுமதி வழங்க முடியுமா?

04. எமது எதிர்கால சந்ததிகளுக்கு இவ்வளம் தேவைப்படும் என்று உணராதது ஏன்?

05. பல உயிரிழப்புக்கள் நிகழ்ந்தும் ஜனநாயக ரீதியிலான முன்னெடுப்புக்களை சமூக கூட்டு அமைப்புக்கள் என்ன செய்தது?

06. வாகனங்கள் காலையில் (அதிகாலை 06மணிக்கு முன்) தொழில் செய்வதற்கு வந்து இரவு 10மணிக்கு பின்னர் அவர்கள் செல்வதற்கு ஒழுங்குகள் செய்ய அரசியல் வாதிகளுக்கு அதிகாரம் இல்லாமல் போனது ஏன்?

இத்தனை இருந்தும் எமது சமூகம் என்னையும் சேர்த்து கண்மூடி இருப்பது ஏன் ஜனநாயக ரீதியிலான முன்னெடுப்புக்களை ஏன் நாம் செய்வதற்கு பின் வாங்குகின்றோம்

மூதூர் சமூகத்திற்கு சமர்ப்பணம்
றபீக் சர்றாஜ்
மூதூர்
இறுதி உளக்குமுறல்... மூதூர் சமூகத்திற்கு சமர்ப்பணம். இறுதி உளக்குமுறல்... மூதூர் சமூகத்திற்கு சமர்ப்பணம். Reviewed by nafees on 21:40 Rating: 5

No comments:

Powered by Blogger.