கணவன் மனைவி சடலமாக மீட்பு. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தடயப் பொருட்களும் மீட்பு.


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில் கணவன் மற்றும் மனைவி
ஆகியோரின் சடலங்கள் திங்கட்கிழமை 19.08.2018 அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறிஞ்சாமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான நீலவண்ணன் லோகநாயகி (வயது 29) மற்றும் கந்தசாமி வேதநாயகம் (வயது 36) ஆகியோரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

ஏற்கெனவே திருமணமான இவர்கள் இருவரும் இரண்டாந்தாரமாக ஒருவரையொருவர் திருமணம் செய்திருந்ததாக விசாரணைகளில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், நீலவண்ணன் லோகநாயகிக்கு முந்தைய தாரத்தின் மூலம் ஒரு குழந்தையின் தற்போதைய இரண்டாந்தாரத்தின் மூலம் 5 மாதக் கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் சில தடயப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

-அப்துல் கையூம் -

கணவன் மனைவி சடலமாக மீட்பு. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தடயப் பொருட்களும் மீட்பு. கணவன் மனைவி சடலமாக மீட்பு. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தடயப் பொருட்களும் மீட்பு. Reviewed by nafees on 23:39 Rating: 5

No comments:

Powered by Blogger.