இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட கலகம்,குழப்பத்தை
அடக்குவதில் அரசாங்கத்தின் மந்தபோக்கு அசிரத்த போன்றவைகளை, முஸ்லிம் அரசியல் வாதிகள்,பொதுமக்கள் சார்ந்த நிறுவனங்கள் உற்பட மார்க்கம் சாரந்த அமைப்புகள் அவற்றை எதிர்நோக்கிய விதம் உண்மையில் ஆழமான மனஉளச்சலை எமக்கு மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் சொத்துக் களையும் அவர்களின் வியாபார தளங் களையும் எந்த ஈன இரக்கமுமின்றி அழித்து நிர்மூலமாக்கியுள்ள நிலைமை, அவர்களின் இருப்பை இல்லாமல்செய்ய எடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் ஒன்று மட்டும் தாராளமாகப் போதும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்கள் இறுதியாக உள்ள மானத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் அரசாங்கத்தின்தோல்வியை வெ ளிப்படுத்தவும் அமைச்சுப்பதவிகளைவிட்டு வெளியேறுவது. இந்த முடிவு யோக்கியமான தாகத் தென்பட்டபோதும் முஸ்லிம் அரசியல் வாதிகள், இனத்தின் பாதுகாப்வை விடவும் அவர்களின் பதவி, பட்டம் கொடுப்பனவு களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். என்ன நஷ்டம் ஏற்பட்டாலும், சமூகம் எந்த அளவு நிந்திக்கப்பட்டாலும் முஸ்லிம் பராளுமன்ற அங்கத்தவர்கள் பதவியில்தொங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பது சிங்கள ஆட்சியாளர் களுக்கு நன்குதெரியும்.
இந்த உண்மையை நிதர்சனப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும்முஸ்லிம் உம்மத்துக்கு இழைத்த அழிவையும் அநியாயத்தையும் மூடிமறைத்து சர்வதேசத்துக்கு மண்ணைத் தூவும் வகையில் சென்ற வாரம் சனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம் அமைந்தது. அப்போது மூஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் சனாதிபதியுடன் ஒன்றாக பாகிஸ்தான் பயணித்தார்கள்.அவர்களில் எஸ்.எம்.மரிக்கார்,ஹிஸ்புல்லாஹ், இஷாக் ரஹீம், மஸ்தான் காதர், அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இவர்கள் உண்மையில் வெட்கம் கெட்டவர்கள். அதற்கு ஒருபடி மேல், ஜெனீவாவில் UNHRC இன் 37 தொடர் கூட்டத்தில் கலந்துகொண்டு இலங்கையைப் பாதுகாக்க அரசாங்கத்தின் பகடைக்காயாக அமைச்சர் பய்ஸர் முஸ்தபா ஜெனீவா சென்றார். அமைச்சர் என்ற வகையில் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை அநியாயம் பற்றி ஒரு வார்த்தையை அவர் அங்குபேசினாரா?
ஆனால் வௌளிக்கீற்றுக்கள் போன்று நம்பிக்கை இன்னும் இருக்கின்றது. உதாரணமாக முஸ்லிம்களைப் பாதுகாக்க தவறிய அரசாங்கத்துக்கு தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக சனாதிபதி சிரிசேனவின் குழுவில் பாகிஸ்தான்செல்ல பாராளுமன்ற அங்கத்தவர் முஜீபுர் ரஹ்மான் மறுப்புத்தெரிவித்தார். முஸ்லிம்களைப் பாதுகாக்க அரசியல்வாதிகள் தவறியபோது மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைப் பகிரங்கமாக எதிர்த்த்துடன் அது பற்றி சனாதிபதி, பிரதமர்,பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோருக்கு அறிவித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தூண்டிய ஒரு சில முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களுள் அவரும் முக்கியமானவர். இந்த விடயத்தில் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் வாதிகள்,மார்க்கத் தலைவர்கள் உற்பட பொதுமக்கள் குழுக்களின் நிலைப்பாடு, முஸ் லிம் சமூகத்தின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, அவர்களின்போக்கு மிகவும் கவலையளிப்பதாக அமைந்துள்ளது.
உதாரணமாக கடந்த வியாழக்கிழமை மார்ச் 8, 2018, வன்செயல்கள் நடைபெற்று 5வது நாள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையில் 15 மக்கள் குழுக்களின் பிரதிநிதிகள், சனாதிபதிமைத்திரிபால சிரிசேனயைச் சந்தித்தது.
இது மார்க்கப் பிரச்னை அல்ல.இது ஒரு அரசியல் விவகாரம். எனவே, இந்த எரியும் அரசியல் விவகாரத்தில் ஏன் ஜம்இய்யதுல் உலமா தலையிடவேண்டும். இது சமூகத்தின் அரசியல் அறிவில் உள்ள சூன்யத்தை அல்லது வெற்றுத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.
“இந்த எதிர்பார்க்கப்ட்ட கலவரம் பற்றி எத்தனையோ அறிக்கைகளும்செய்திகளும் கிடைந்தும் சனாதிபதி என்றவகையில் நீங்கள் ஏன் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை” என அங்குசென்ற எந்த ஒரு உறுப்பினரும் ஜனாதிபதியிடம்கேள்வி கேட்கவில்லை. சிலவேளை கேள்விகேட்டு சனாதிபதியை அசௌகரியப்படுத்த அவர்கள் விரும்பாதிருக்கலாம். அதேநேரம்,அழிவு நிகழ்ந்து முடிந்த பிறகு இந்தக் கூட்டம் நடைபெறுவதன்நோக்கம் என்ன? ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் பற்றி எல்லா இலங்கையர்களும் சமாதானமாக வாழும் சூழலை ஏற்படுத்த தமது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் இலங்கை முஸ்லிம்கள், ஜனாதிபதி சிரிசேனவுக்கு வழங்குவதாக 09 திகதி மார்ச் 2018 அன்று சிலோன் டெய்லிநியுஸ் பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டது.
எதற்காக ஒத்துழைப்பு வழங்குவது ஏன்? முஸ்லிம்களின் சொத்துக்களையும் உடைமை களையும் அழித்து பள்ளிவாயல்களை எரித்து சாம்பலாக்கும் இனவாதிகளின் செயல்பாட்டு க்கு ஆதரவுகொடுத்து ஒத்துழைப்பும் வழங்குவதா?
கறுப்பு அபாயாக்களும், பெண்களின் முகமூடிகளும், முஸ்லிமல்லாதவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தொழுகைக்காக அழைக்கும்போது முஸ்லிமல்லாதவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாகக் கூறப்படும், பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிகள் பாவிப்பது போன்ற பல பிரச்னைகள் இருக்கின்றமை உண்மைதான். நடுநிலைமையாக சிந்திக்கும், நாட்டில் அவைரும் சமாதானமாக வாழவேண்டும் எனக் கருதும் முஸ்லிமல்லாதவர்கள் இந்த விடயங்கள் பற்றி முஸ்லிம்களுடன் அவர்கள் பேசுகின்றார்கள்.
இந்த விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சமூகத்தை முற்றாக மறந்துசெயல்படுகின்றது. அதுமட்டுமன்றி இந்த விவகாரங்களில் அவர்கள் தோல்வி கண்டுள்ளனர்.
அதற்குப் பகரமாக, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு முஸ்லிம் நவமணி பத்திரிகையில் அபாயா,முகம் மூடுவது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரின் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர், பெண்கள் கறுப்பு அபாயா அணிவதும், முகம் மூடுவதும் கட்டாயக் கடமையாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவருடைய கருத்தை நிறுவும் வகையில் அல்குர்ஆனில் இருந்தோ அல்லது ஹதீஸில் இருந்தோ எந்த ஆதாரத்தையும் கூறவில்லை..இது தொடர்பாக,லண்டனை இருப்பிடமாக க்கொண்ட எகிப்து நாட்டின் இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான செய்யித் முதவல்லி அல்தஹ்ஷ் அவர்கள் எழுதிய “ ஹிஜாப் அல்லது நிகாப்” என்ற நூலில் பெண்கள் முகம் மூடுவதை விமர்சிக்கும் அவர் அதுபற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.;” நிகாப் அல்லது முகம் மூடுவது கட்டாயக் கடமையாகும் என்ற விடயத்தில் நான் முரண்படுகின்றேன். அதுதொடர்பாக, அல்குர்ஆன், சுன்னாவில் உறுதியான ,கேள்விக்கு அப்பாற்பட்ட கட்டளைகள் எதுவும் இல்லாத காரணத்தால்,. இதுபற்றி எழுதுவதற்கு எனக்கு ஆரம்பத்தில் இருந்தே விருப்பமில்லை. ஏனெனில் அல்குர்ஆன், சுன்னாவில் இல்லா அம்சங்கள் பற்றி தர்க்கிப்பது சமூசத்தில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் மிதமான சிந்தனைகளுக்கு அது சவால் விடுவதாக அமையும்.
தற்போது வாழும் கற்றவர்களின் கருத்துக்களைக் கேட்கும்போது எனக்குபெரும் வியப்பாக இருக்கின்றது. அல்லது நாம் தற்போது ஓர் அசாதாரணமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அல்லது அதனை வேறு வார்த்தையில் கூறினால், சமூகம் கெட்டுப்போயிருக்கின்றது.பெண்கள் அவ்வாறு இருக்க வேண்டும். இல்லை இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்கின்றனர்...”. இது பகுத்தறிவு இல்லாத ஒரு சிந்தனைப்போக்கு, இத்தகையபோக்குகள் இஸ்லாமிய சட்டங்களை ஏளனமாகவும் அற்பமாகவும் கருதும் ஒரு சூழலை உருவாக்கும். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் முப்திகள் தற்போதைய நவீன வங்கி முறைகள் கடந்த காலங்களில் கடன் வழங்கும் முறைகள், கடந்த கால வட்டிக்கொடுக்கல் வாங்கல் போன்றவற்றை விட வித்தியாசமானவை. எனக்கூறுகின்றனர். இது உண்மையில் மிகவும் பயங்கரமான ஒருபோக்காகும்.”.
நாம் ஒரு வித்தியாசமான ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றோம். வரலாற்றிலே முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு பலமும் சக்தியும்கொண்ட, இஸ்லாம், முஸ்லிம்களுக்கு எதிரான உலக மட்டத்திலான இராணுவ படையெடுப்பு மிகவும் பலம் வாய்ந்த சக்தி எமக்கு எதிராகப் போராடுகின்றது என்பதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புரிந்து கொள்ளவேண்டும்.
முஹம்மத் (ஸல்) அவர்களுடைய காலம்தொட்டு இஸ்லாம்,முஸ்லிம்களின் எதிரியாக இருந்து வரும் இஸ்ரவேல் தலைமையில் இந்த படையெடுப்பு நன்கு திட்டமிட்டு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற எத்தனையோ சக்திகளுடன் ஒருங்கிணைந்து வளைகுடா நாடுகளில் ஆட்சிசெய்யும் அக்கிரமக்கார ஆட்சியாளர்களின் உறுதுணையுடன் முஸ்லிம்களுக்கு எதிரான நாடகம் தற்போது அரங்கேறுகின்றது. இந்த யுத்தமோகம் பிடித்த சக்திகளுடன் அண்மையில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் RSS யின் பெரும் பான்மையுடன் ஆட்சிசெய்யும் BJP அரசாங்கத்தின் பிரதமர் நரேந்திரா மோடியும் இணைந்துள்ளார்.
மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளை அழித்து, முஸ்லிம்களைக்கொன்று குவிக்கும் ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்றொழித்த அந்த சக்திகள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அதன் மறைமுக திட்டங்கள், இலக்குகளுடன் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அந்த விஷமத் திட்டங்களை செயல்படுத்த கூலிப் படைகளாக இயங்க சிங்கள சக்திகள் முன்வந்தன. இந்த இனப்படுகொலைகளைத் தடுப்பது அதனைத் தடை செய்வதில் தோல்வி கண்ட இலங்கை அரசாங்கத்தின் போக்கு, இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை தற்போது மாற்றமடைந்து வருவதைக் காட்டுகின்றது.மேலும் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கு இந்த யுத்தக்காவிகளின் சதித் திட்டத்தில் மைத்திரி-ரணில் அரசாங்கம் உள்வாங்கப்பட்டிருப் பதையும் காட்டுகிறது. இம்மாத ஆரம்பத்தில் மத்திய மாகாணத்தில் இனவாதிகள் முஸ்லிம்களைத் தாக்கி அவர்களின் உடைமைகளை அழிக்கும்போது இனவாதிகளுக்கு இடமளித்து இனத்த துவேசிகளை ஊக்கப்படுத்தியமை யுத்தக்காவிகளின் திட்டமாக இருக்கலாம். அதன்நேரடியான விளைவு நாட்டின் அரசியலை ஆட்டம் காணச் செய்துள்ளது.
படைகளின் அட்டகாசம் தற்போது கொஞ்சமகொஞ்சமாக வெளிப்படுகிறது. பொலிஸின் விசேட படைப்பிரிவு (STF) பள்ளிவாயல்களில் ஊடுருவி அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் களைத் தாக்கியிருக்கின்றது.
உதாரணமாக, கிடைத்த அறிக்கையின் படி அமைதியாக மூஸ்லிம்கள் வாழும் திகனைக்கு பக்கத்தில் உள்ள கும்புக்கந்துர ஊரில் உள்ள ஹிஜ்ராபுர பள்ளிவாயலில் விசேட படை ஊடுருவி, அங்குதொழுகையில் ஈடுபட்டிருந்த வயது முதிர்ந்த ஒருவரை தன் சப்பாத்துகளால் உதைத்துத் தாக்கி அங்கிருந்த இருவரைப் கைதுசெய்து அவர்களை மிகமோசமாகத் தாக்கிக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்த நல்லமனம் படைத்த ஒரு பௌத்த மத குரு ஒருவர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்துள்ளனர். மைத்திரியை சனாதிபதியாக்கவும், தொடர்ந்து 28 வருடங்கள் தோல்வியடைந்த ரணிலைப் பிரதமராக்கவும் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர். இந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் அழிவும் நடைபெறுவது அதே மைத்திரி-ரணிலின் தலைமையிலான அரசாங்கம் என்பது தான்பெரும் அநியாயமும் அக்கிரமுமாகும்.
அதேநேரத்தில் நாம் அனைவரும் மதிக்கும் ஒரு நல்லமனிதர் எனக்கூறும் ஒருவரான தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய அவர்களின் கூற்று பெரும் ஏமாற்றத்தையும் மனக்கவலை யையும் ஏற்படுத்தியுள்ளது.” மத்திய மாகாணத்திலும் அம்பாறையிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை பெரும்பாலான சிங்களவர்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள்.” மத்திய மாகாணத்தில் அமைதியாக வாழும் முஸ்லிம்கள் இந்த தண்டனையைப் பெறுவதற்கு என்ன கைங்கரியம்செய்தார்கள். பௌத்தத்தைப் பின்பற்றுவதாக்கூறும் இவர்கள் மற்றவர்களைத் தாக்கி அநியாயம்செய்துவிட்டு எவ்வாறு நிம்மதியாக இருக்க முடியும்? இது ஒருவெட்கம்கெட்ட ஒருசெயலாக மாட்டாதா?
இனவாத சிந்தனை ஊடாக தனது அறியாமையை அவர் வெளிப்படுத்துகின்றார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில்பௌத்த மத குருமார்களை அழைந்து பிரசங்கங்கள் செய்ய மாட்டார்களா என முஸ்லிம்களுக்கு அவர் சவால் விடுகின்றார். பெரும்பாலான முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளில் பௌத்த மதகுருமார்களை, பிரதம அதிதிகளாக அழைப்பதும் அவர்களைக் கொண்டு பிரசங்கங்கள் செய்வதும் தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அராபியர்களின் கலாசாரங்களைப் பின்பற்றுவது இலங்கை முஸ்லிம்களிடையே பிரபலமாகிவருவதும் எரியும்நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார். கறுப்பு அபாயா போன்றமுஸ்லிம் பெண்களின் உடைகளில் ஏற்படும் மாற்றம் பற்றியும் அவர் குறிப்பிடுகின்றார். இதுதொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பல வருடங்களுக்கு முன்பே சமூகத்துக்கு அறிவுறுத்தியிருக்கவேண்டும். இந்த விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா படுதோல்வி கண்டுள்ளது.
முஸ்லிம்கள், தங்களையும் ,தங்கள் குடும்பம்,சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் அவர்கள் இஸ்லாத்தின் பால் இஸ்லாமிய வாழ்க்கையின் பக்கம் திரும்பவேண்டிய காலம் வந்துவிட்டது.
உண்மை, யதார்த்தத்தின் பக்கம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திரும்பிப் பார்த்து தங்கள் சமூகத்தை வழிநடாத்தவும் ஏனை ய சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்கஅவர்களைத் தயார்செய்து கொள்ளவேண்டிய தருணம் இது. சிறந்த நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட, முரண்பாடுகளில் இணக்கம் காணும், சமூகம் நன்று மதிக்கும் உலமாக்களையும் அறிஞர்களையும் ஒரு நீண் இலக்கினை முன்நோக்கிச் செல்ல தயார்படுத்த வேண்டிய மகத்தான பொறுப்பு இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு இருக்கின்றது.
ஒரு முழுமையானதொடர்பாடல் வசதி இல்லாதபோது, ஒவ்வொரு பள்ளிவாயல் களிலும் ஜும் ஆத்தொழுகையை நாம் வாழும் அவதானமிக்க சூழல், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகச் சூழ்ச்சிசெய்யும் பலம்வாய்ந்த அற்பமான சக்திகள் பற்றியும், நாம் எவ்வாறு அவதானத்துடனும் கவனமாகவும் செயற்படவேண்டும் என்பது பற்றியும் சமூகத்துக்கு விளக்கி அறிவூட்ட ஜும் ஆத் தொழுகையை நாம் பயன்படுத்தவேண்டும். மத்திய மாகாணத்தில் நடைபெற்ற வன் முறைகளும் அழிவுகளும் தற்செயலாக ஏற்பட்டதல்ல. அதை விடமோசமான நிகழ்ச்சிகள்தொடரும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன என்பதையும் நாம் நன்றாக நினைவில்வைத்துச் செயற்படவேண்டும்.
ஆங்கிலத்தில் - லதீப் பாரூக்
தமிழில் ஏ.ஸீ.எம்.இனாயத்துல்லாஹ்
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்.
Reviewed by nafees
on
08:22
Rating:
Reviewed by nafees
on
08:22
Rating:
No comments: