கைது செய்யப்பட வேண்டியது அமித் வீரசிங்க அல்ல... சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே.


ஏ.ஆர்.ஏ.பரீல் -
கண்டி மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்களுக்காக
கைது செய்யப்பட வேண்டியவர்கள் மஹசொஹொன் பலகாயவின் அமித் வீரசிங்கவும் மற்றும் இளைஞர்களுமல்ல.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே கைது செய்யப்பட்ட வேண்டியவர்.
வன்செ யல்கள் இடம்பெற்றபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார் என பொதுபல சேனா அமைப்பின் செய லாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப் பிட்டார்.

கண்டி, தெல்தெனிய வன்செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மஹசொஹொன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க உட்பட்ட குழுவினரை ஞானசார தேரர் கடந்த சனிக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அவர்களின் சுக நலன் விசாரித்தார்.

பின்பு அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்..

 கண்டி, தெல்தெனிய வன்செயல்கள் இடம்பெற் றபோது பொலிஸாரின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பதைக் கண்டோம். அவர்கள் வன்செயல்களைக் கட் டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை .

தெல் தெனியவிலிருந்து திகன பலகொல்ல வரையிலான 17 கிலோமீற்றர் தூர எல் லைக்குள் இருந்த சொத்துக்கள் வெளியிலிருந்து வந்தவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.


என்றாலும் கைது செய் யப்பட்டுள்ளவர்கள் வன் செயல்களுடன் தொடர்பு படாத அப்பாவிகள். அவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சித்தவர்கள். அவர்கள் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளார்கள்.

அர சாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காகவே அப் பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


இவ்வாறான நடவடிக்கை களைத்தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதியைக் கோரு கிறோம். 270 க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள்,

எதிர்காலத்தில் மேலும் பல கலவரங்கள், இளைஞர் எழுச்சிகள் உரு
வாகலாம். அது அரசியல் புரட்சியாகவும் இருக்கலாம்.

பிரச்சினைகளை கைதுகள் மூலம் தீர்க்க முயற்சித்தால் இந்நாட்டிலுள்ள பாடசா லைகள் அனைத்தையும் சிறைச்சாலைகளாக மாற்ற வேண்டியேற்படும்.


நாம் மிகவும் பொறுப் புடன் கூறுகிறோம்.

இப் போதாவது இந்நாட்டில் இடம்பெற்று வரும் கலாச்சார  ஆக்கிரமிப்பு நிறுத் தப்படவேண்டும். நாட்டில் சம்பிரதாய முஸ்லிம்கள் வஹாப் வாதத்திற்கு உள் ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நாட்டின் இந்து மற்றும் பௌத்த மக்கள் வஹாப் வாத அடிப்படை வாதி களின் நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதனால் ஒவ்வோர் இடங் களிலும் சமயங்களுக்கி டையில் பிரச்சினைகள் ஏற் படுகின்றன, சந்தேகங்கள் உருவாகின்றன.


இவற்றை கட்டுப்படுத்து வதற்கு எமது நாட்டில் திட் டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது கவலைக்குரிய தாகும்.

எவ்வளவு காலத்துக்கு நாம் ஒருவருக் கொருவர் குரோதத்துடன், வைராக்கியத்துடன் வாழ முடியும். ஒருவரது முகத்தை மற்றவர் பார்க்காது இந்தப் பயணத்தை எம்மால் முன்னெடுக்க முடியுமா? சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என்ற வேறுபாடற்ற ஒரு சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும்.


அரசியலைப் புறந்தள்ளி நாமனைவரும் ஒன்றாக, ஒருமித்து செயற்படும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் கலவரங்களே உருவாகும் என்றார்.

கைது செய்யப்பட வேண்டியது அமித் வீரசிங்க அல்ல... சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே. கைது  செய்யப்பட வேண்டியது  அமித் வீரசிங்க அல்ல... சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே. Reviewed by nafees on 02:24 Rating: 5

No comments:

Powered by Blogger.