பிரதமர் ரணிலுக்கு எதிராக பேரணி! மைத்ரி குணரத்ன கைது!




ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் 
மைத்ரி குணரத்ன
இரண்டு (Shotgun) துப்பாக்கிகளுடன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் இருந்து கொழும்பு வரை பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

”சர்வாதிகார நண்பர்களை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.

கண்டி – கெடம்பே விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர், கெடம்பே மைதானத்திற்கு அருகில் இந்த பேரணி ஆரம்பமானது.

ஐந்து நாட்களாக நடைபெறவுள்ள இந்த பேரணி நம்பிக்கையில்லா பிரேரணை இடம்பெறும் தினமான ஏப்ரல் 4ம் திகதி பாராளுமன்ற பகுதிக்கு வருகை தந்து நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குறித்த பேரணி ஆரம்பமானதை தொடர்ந்தே ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்ரி குணரத்ன துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-அல்மசூறா நியூஸ் -
பிரதமர் ரணிலுக்கு எதிராக பேரணி! மைத்ரி குணரத்ன கைது!   பிரதமர் ரணிலுக்கு எதிராக பேரணி! மைத்ரி குணரத்ன கைது! Reviewed by nafees on 06:38 Rating: 5

No comments:

Powered by Blogger.