பேஸ்புக்கில் இன, மத­வா­தத்தை தூண்டி கைதான முன்னாள் இரா­ணுவ கப்டனுக்கு விளக்கமறியல்.


(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்­பி­லுள்ள பிர­பல ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றின் பாது­காப்பு முகா­மை­யா­ள­ராக செயற்­பட்டு
வந்­த­தாக கூறப்­படும், முன்னாள் இரா­ணுவ கப்டன் தர அதி­கா­ரி­யான கம்­பஹா பிர­தே­சத்தை சேர்ந்த ஸ்ரீநாத் பெரேரா என்­ப­வரை கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார ஏப்ரல் மூன்றாம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நேற்று உத்­த­ர­விட்டார்.

பேஸ்புக் சமூக வலைத்­தளம் ஊடாக இன, மத­வா­தத்தை தூண்டும் கருத்­துக்­களை பரப்பி வன்­மு­றை­க­ளுக்கு தூப­மிடும் வண்ணம் நடந்­து­கொண்டார் என, தேசிய உளவுத் துறையின் பணிப்­பா­ளரின் முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அவர் கைது செய்­யப்பட்டு நேற்று நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட போதே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

குறித்த இரா­ணுவ முன்னாள் கப்­ட­னான ஸ்ரீநாத் பெரேரா, அவ­ரது தொலை­பே­சியில் பேஸ் புக் சமூக வலைத்­தளக் கணக்கை இயக்­கி­யமை, சொந்த பெயரில் இயக்­கப்­பட்ட அந்த கணக்கு ஊடாக இன மற்றும் மத நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தி வன்­மு­றை­களை தூண்டும் கருத்­துக்­களை சுய­மாக பரப்­பி­யமை தொடர்பில் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்ள நிலை­யி­லேயே அவரைக் கைது செய்­த­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது. அதன்­ப­டியே 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­கா­ரமும், கணினி சட்­டத்தின் பிர­கா­ரமும் சந்­தேக நபரைக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­வ­தாக குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.

குறித்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என சுட்டிக்கடடிய நீதிவான் லால் ரணசிங்க பண்டார சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Image result for srinath perera army
பேஸ்புக்கில் இன, மத­வா­தத்தை தூண்டி கைதான முன்னாள் இரா­ணுவ கப்டனுக்கு விளக்கமறியல். பேஸ்புக்கில் இன, மத­வா­தத்தை தூண்டி கைதான முன்னாள் இரா­ணுவ கப்டனுக்கு விளக்கமறியல். Reviewed by nafees on 23:56 Rating: 5

No comments:

Powered by Blogger.