இஸ்ரேலில் விவசாய தொழில்துறையில் தொழில்வாய்ப்புக்கள் இலங்கைக்கு கிடைத்தது ...




ஜப்பானிலோ அல்லது இஸ்ரேலிலோ தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக
இடைத்தரகர்களுக்கு எந்தவித பணமும் செலுத்தவேண்டியதில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை இஸ்ரேலிலுக்கு சென்று சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலில் விவசாய தொழில்துறையில் தொழில்வாய்ப்புக்களை பெற்ற இளைஞர்களுக்கு விமான ரிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வில் பிரதி அமைச்சர் உரையாற்றினார். இது தொடர்பான வைபவம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இஸ்ரேல் மற்றும் ஜப்பானில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது வெளிநாட்டு பணியகம் மற்றும் அரசாங்கத்தின் ஒரேயொரு வெளிநாட்டு பிரதி நிறுவனமான இலங்கை வெளிநாட்டு முகவர் நிலையமாகும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர் இஸ்ரேலில் தொழில் வாய்ப்பிற்காக செல்வோர் தொழில் வாய்ப்பிற்கான காலஎல்லை முடிவடைந்தவுடன் உடனடியாக இலங்கைக்கு திரும்ப வேண்டும்.

குறிப்பிட்ட விசாக்காலப்பகுதிக்கு மேலதிகமாக அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதன் மூலம் மற்றொரு இலங்கையருக்கான தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகும். உரிய காலத்திற்குள் தொழில் வாய்ப்பிற்கான காலத்தை பூர்த்தி செய்து இலங்கைக்கு திரும்புவோருக்கு மீண்டும் அந்நாட்டில் தொழில்வாய்ப்பிற்காக செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருப்போருக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . இவ்வாறானோரினால் எமது நாட்டுக்கு கிடைக்கவுள்ள தொழில் வாய்ப்பிற்கான கோரிக்கையை நாம் இழப்போம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலில் விவசாய தொழில்துறையில் தொழில்வாய்ப்புக்கள் இலங்கைக்கு கிடைத்தது ...  இஸ்ரேலில் விவசாய தொழில்துறையில் தொழில்வாய்ப்புக்கள் இலங்கைக்கு கிடைத்தது ... Reviewed by nafees on 06:08 Rating: 5

No comments:

Powered by Blogger.