கனடாவில் புத்தர் சிலை உடைத்துச் சேதமாக்கப்பட்டது. போலீசார் விசாரணை.

இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, ஒட்டாவாவில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில்
வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
http://ottawacitizen.com/news/local-news/police-investigating-vandalism-of-buddhist-statue
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கும் நேற்றுக்காலை 7.30 மணிக்கும் இடையில் நடந்திருக்கலாம் என்று ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிலையின் தலைப்பகுதி, மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டாவாவில் உள்ள ஹெரோன் வீதியில் அமைந்துள்ள, ஹில்டா ஜெயவர்த்தன பௌத்த மடாலயம் மற்றும் தியான நிலையத்தின் முன்பாக உள்ள தோட்டத்தில் இந்த சிலை வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஒட்டாவா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதுடன், இதற்குப் பின்னால் வெறுப்புணர்வு நடவடிக்கைகள் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
கனடாவில் புத்தர் சிலை உடைத்துச் சேதமாக்கப்பட்டது. போலீசார் விசாரணை.
Reviewed by nafees
on
04:22
Rating:
Reviewed by nafees
on
04:22
Rating:
No comments: