பாததும்பர பிரதேச சபையில் மொட்டு வேற்றிலை இணைந்து ஆட்சியமைக்க இணக்கப்பாடு !!



பாததும்பர பிரதேச சபையில் 15 உறுப்பினர்களை வெற்றிகொண்ட பொதுஜன பெரமுன மற்றும் மூன்று போன்ஸ்
ஆசனங்களை வெற்றிகொண்ட ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து ஆட்சியமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இரு கட்சிகளில் இருந்தும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைவாக பாததும்பர பிரதேச சபையில் 15 உறுப்பினர்களை வெற்றிகொண்ட பொதுஜன பெரமுனவுக்கு சபை தலைவர் பதவியும் மூன்று போன்ஸ் ஆசனங்களை வெற்றிகொண்ட ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒருவருக்கு உப தலைவர் பதவியையும்  வழங்க இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் அசங்க அபேசிங்க அவர்களுக்கு சபை  தலைவர் பதவி வழங்கப்படவுள்ள நிலையில் உப தலைவர் பதவி முன்னாள் சபை தலைவர் சுதர்மா வெலகெதர அவர்களுக்கு  வழங்க இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை மடவளை மடிகே வட்டாரத்தில் சுதந்திர கட்சிக்கு ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்த மடவளை அபு அவர்களுக்கு பிரதி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று சுதந்திர கட்சிக்குள் இருந்து எழுந்த  கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளதாகவும் அரசியல் அனுபவும் அரசியல் முதிர்ச்சியும்  கொண்ட முன்னாள் பாததும்பரை பிரதேச சபை  தலைவர் வெலகெதரவுக்கு உப தலைவர்  பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரியுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாததும்பர பிரதேச சபையில் மொட்டு வேற்றிலை இணைந்து ஆட்சியமைக்க இணக்கப்பாடு !!  பாததும்பர பிரதேச சபையில் மொட்டு வேற்றிலை இணைந்து ஆட்சியமைக்க இணக்கப்பாடு !! Reviewed by nafees on 06:52 Rating: 5

No comments:

Powered by Blogger.