யாருடைய அழுத்தங்களுக்கும் பயந்து முஸ்லிம்கள் தமது பெண்கள் கறுப்பு அபாயா அணிவதை விட்டுக்கொடுக்க முடியாது.

யாருடைய அழுத்தங்களுக்கும் பயந்து முஸ்லிம்கள் தமது பெண்கள் கறுப்பு அபாயா அணிவதையோ நமது
கலாசார விழுமியங்களை பாதுகாப்பதையோ விட்டுக்கொடுக்க முடியாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலுக்கு காரணம் அபாயாவோ வேறு உணவுகளோ அல்ல. மாறாக எப்படியாவது முஸ்லிம்களை தாக்க வேண்டும் அவர்கள் பொருளாதாரத்தை அழிப்பதன் மூலம் அடிமைப்படுத்த வேண்டும் என்ற உலகளாவிய திட்டத்தின் எதிரொலியே இந்த நிகழ்வுகளாகும்.
அன்று நாம் ஹலாலை விட்டுக்கொடுத்ததன் மூலம் எமது நல்லிணக்கத்தையும், பௌத்த மதத்தின் மீதான மரியாதையையும் காட்டினோம். ஆனால் அதனை அடிமைத்தன விட்டுக்கொடுப்பாக நினைத்துக்கொண்டனர். ஆனால் இந்த ஹலால் என்பது ஒரு வெள்ளோட்டமே என்பது இப்போது புரிகிறது.
முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயாவை களைந்து கலர் அபாயாவை அணிந்தாலும் அதற்கும் ஒரு குறை நிச்சயம் சொல்வார்கள். ஏன்தலையை மறைக்கிறீர்கள் என்பார்.
அதையும் களைந்து குட்டை கவுனை அணிந்தாலும் ஏன் எம்மைப்போல் நீங்கள் அணிகிறீர்கள் என கேட்டு அடிக்க வருவார்கள். ஆக இனவாதிகள் எதையும் சொல்லத்தான் செய்வர். இந்த நிலையில் நமது பாரம்பரியங்களை விட முடியாது.
ஆகவே கறுப்பு அபாயா அணிவோர் தைரியமாக அணிய வேண்டும். இதுவரை அணியாதவர்களும் இனி அதிகம் அணிய வேண்டும். அதுதான் எம்மை அடித்து நொறுக்கி விட்டீர்களே இனி ஏன் நாம் கறுப்பு அணிவதை விட வேண்டும் என கேட்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எவ்வளவு அடித்தாலும் அவர்கள் தமது கொள்கையில் உறுதியானவர்கள் என்பதை பேரினவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் நாம் உறுதியாக இருந்தால்த்தான் எம்மை சீண்டுவதை தவிர்ப்பார்கள்.
ஆகவே மார்க்கம் நமக்கு பகிரங்கமாக அனுமதித்திருக்கும் எதனையும் நாம் இனவாதிகளுக்காக விடத்தேவையில்லை. இது விடயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள் என்போர் முஸ்லிம் சமூகத்துக்கு புத்திமதி சொல்ல வராமல் பேரினவாதிகள் இது விடயங்களை பெரிது படுத்தியதன் காரணமாகவே முஸ்லிம்கள் மேலும் மேலும் மார்க்கத்திலும் தமது கலாசாரத்திலும் பற்றுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
யாருடைய அழுத்தங்களுக்கும் பயந்து முஸ்லிம்கள் தமது பெண்கள் கறுப்பு அபாயா அணிவதை விட்டுக்கொடுக்க முடியாது.
Reviewed by nafees
on
21:52
Rating:
Reviewed by nafees
on
21:52
Rating:
No comments: