நல்லிணக்க கலந்துரையாடலுக்கு சென்ற குழுவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம்...
கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று (21) அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்காக கண்டியில் இருந்து சென்ற உலமாக்கள் பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியற்றின் உறுப்பினர்கள் மத்திய மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு கடவத்தையை அண்மித்த பகுதியில் மோசமான ஒரு அனுபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று உலமாக்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சென்ற (சிறிய வகை பஸ் ) வாகனத்தை கடவத்தையை அண்மித்த பகுதியில் இடது பக்கமாக முந்தி செல்ல மோட்டார் சைக்கிள் ஒன்று முற்பட்டுள்ளதால் வலப்பக்கமாக வாகனத்தை செலுத்த முஸ்லிம்கள் சென்ற வாகனம் முற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பின்னால் வந்த பெரும்பான்மை வாகனம் உலமாக்கள் உள்ளிட்ட குழு சென்ற வாகனத்தை வேகமாக முந்தி சென்று குறுக்கே மறித்து நடு வீதியில் நிறுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து கீழே இறங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் கண்டி ஜம்மியதுல் உலமா முக்கியஸ்தர்களான உலமாக்கள் உள்ளிட்டவர்களை முஸ்லிம் சமூக்கத்தை சுட்டிக்காட்டி மிக கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ள அதேவேளை வாகனத்தை செலுத்திய சாரதியிடம் மன்னிப்பு கோருமாறு பணித்துள்ளனர்.
அந்த கசப்பான அனுபவத்துடன் கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியற்றின் உறுப்பினர்கள் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடனான நல்லிணக்க சந்திப்பிற்கு சென்றுள்ள அதேவேளை இது தொடர்பில் எமது கண்டி மாவட்ட அரசியல் முத்துக்களிடமும் முறையிட்டுள்ளனர்.
அரசியல் ஆண்மீகம் துறைசார் விடயங்களில் மாவட்டத்தில் முதன்மையானவர்களுக்கே இந்த அனுபவம் என்றால் சமானியவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் சிந்திக்கவேண்டியுள்ளது.
No comments: