ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரரை தன்னுடன் ஜப்பானுக்கு அழைத்து சென்றார் என்பது வெறும் வதந்தி. இதில் உண்மையில்லை

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜப்பானுக்கான விஜயத்தின்போது பொதுபலசேனா அமைப்பின்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை தன் னுடன் அழைத்துச் சென்றுள்ளார் என்று பரப்பப்படும் வதந்தியில் எவ்வித உண்மையுமில்லை என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பர்ணாந்து வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கான ஜனாதிபதியின் தூதுக்குழுவில் ஒரே ஒரு பௌத்த மத குரு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் உலப்பனே சுமங்கள் தேர ராவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு டெலிகிராப் இணை யத்தளம் ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தில் அவருடனான தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள பௌத்த தேரர்கள் குறித்து எழுப்பியுள்ள கேள்விக்குப் பதிலளிக்கையிலே ஜனாதிபதியின் செயலாளர் இவ் வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
'தூதுக்குழுவில் அடங்கியுள்ள அனைவரதும் பெயர் விபரங்கள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ஜனாதிபதியின் ஜப்பானுக் கான தூதுக்குழுவில் ஒரேயொரு பௌத்த மத குரு இடம்பெற்றிருப் பதை உறுதி செய்ய முடியும். உலப்பனே சுமங்கள் தேரர் அந்தத் தூதுக் குழுவில் இடம்பெற் றிருக்கிறார் என்பது எனக்குத்தெ ரியும். ஏனென்றால் சுமங்கள் தேரர் ஒரு பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றுகிறார்.
அவருக்கு விடுமுறை பெற்றுக் கொடுப்ப தற்கான கடிதத்தை நானே தயார் செய்தேன். உலப்பனே சுமங்கள் தேரர் பொதுபலசேனா அமைப்பின் செய லாளர் ஞானசார தேரருக்கு மிகவும் நெருக்கமானவர்.
ஞானசார தேரரை பிணை யில் விடுவிப்பதற்கு உதவி யாக இருந்தவர். அத்தோடு ஊட கங்களுக்கு உடனடியாகக் கருத்து வெளியிட்டவர்.
ஞானசார தேரர் ஜப்பானுக்கான ஜனாதிபதியின் தூதுக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார் என்று வதந்தி பரப்பப்படுவது அண் மையில் கண்டி, திகன மற்றும் கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்க ளுக்கு எதிரான வன்முறைகளில் அரசாங்கத்தின் ஒரு பிரிவினருக்கு தொடர்புள்ளது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.
முஸ்லிம் குழுவொன்றினால் தாக் கப்பட்ட சிங்களவர் ஒருவர் இரு வாரங்களின் பின்பு காலமானார். ஞானசார தேரர் அந்த சிங்களவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டார்.
ஞானசார தேரர் அச்சந்தர்ப்பத்தில் சிங்கப்பூருக்கு விஜயமொன்றினை மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் நிலைமையினை சுமுக நிலைக்குக் கொண்டுவர உதவவேண்டும் என்பதற்காக தனது விஜயத்தினை பிற்போட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரரை தன்னுடன் ஜப்பானுக்கு அழைத்து சென்றார் என்பது வெறும் வதந்தி. இதில் உண்மையில்லை
Reviewed by nafees
on
22:30
Rating:
Reviewed by nafees
on
22:30
Rating:
No comments: