பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஆற்றில் பாய்ந்த இளைஞன் ஜனாஸாவாக மீட்கபட்ட சம்பவம்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

 சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் பொலிஸாரை கண்டு தப்பிக்க முயன்று ஆற்றில் பாய்ந்து ஜனாஸாவாக  மீட்பு

கிண்ணியா – மணல்ஆறு பிர​தேசத்தில் மஹாவலி கங்கையிலிருந்து, நேற்று (20) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில், தப்பி​செல்ல முயன்ற குறித்த நபர்களில் ஒருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏனைய 4 நபர்களிடமிருந்தும், மணல் அகழ்வு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீரில் மூழ்கி  காணமல் போன இளைஞனின் சடலம் இன்று(21) காலை கடல் படையினரின் உதவியுடன் தேடுதல் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் கிண்ணியா பைசல் நகரை சேர்ந்த (வயது17) ரனீஸ் எனவும் தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்...


பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஆற்றில் பாய்ந்த இளைஞன் ஜனாஸாவாக மீட்கபட்ட சம்பவம். பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஆற்றில் பாய்ந்த இளைஞன் ஜனாஸாவாக மீட்கபட்ட சம்பவம். Reviewed by nafees on 01:14 Rating: 5

No comments:

Powered by Blogger.