எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் பேஸ்புக், வாட்சப் தடை நீக்கப்படும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட
முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை முழுவதும் முகநூல் மீதான தடை நீக்கப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் எதிரொலியாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இலங்கை முழுவதும் அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் பேஸ்புக், வாட்சப் தடை நீக்கப்படும்.
Reviewed by nafees
on
01:08
Rating:
Reviewed by nafees
on
01:08
Rating:
No comments: